Skip to main content
3 மாணவர்களை மயக்கி உல்லாசமாக இருந்த ஆசிரியர் - மதுரை கள்ளக்காதலனுடன் கைது வீடியோ வைரலால் சிக்கினர்

மதுரையில் மகன் உட்பட 3 சிறுவர்களுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியை மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் மாணவர்களுடன் ஒரு பெண், உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ நகரில் வலம் வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் செந்தில்குமார், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கரிமேடு போலீசார் விசாரணை நடத்தினர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தியபோது, திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் உள்ள பள்ளி மாணவர் ஒருவரின் செல்போனுக்கு ஆபாச வீடியோ வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அந்த வாலிபரை வரவழைத்து ஆபாச வீடியோவை அனுப்பியது யார் என விசாரித்தனர். அப்போது தனது மாமா வீரமணி(39) என்பவர் அனுப்பியதாக தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் கடந்த 1ம் தேதி வீரமணியை தேடி சென்றபோது, மதுரை தனக்கன்குளம் பைபாஸ் ரோடு பகுதியில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. வீரமணி செல்போனை வாங்கி பார்த்தபோது, சிறுவர்கள், ஒரு பெண்ணுடன் கூட்டாக உல்லாசமாக இருக்கும் காட்சிகள் வீடியோவாகவும், போட்டோவாகவும் இருந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: திருப்பரங்குன்றம் பாம்பன் நகர் பாலாஜி தெருவில் வீரமணி வசித்து வருகிறார். கட்டிட சென்ட்ரிங் தொழில் செய்து வருகிறார். கடந்த 2010ல் சென்னைக்கு ரயிலில் செல்லும்போது, உடன் பயணித்த 31 வயது பெண் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் இருவரையும் நெருக்கமாக்கியது. அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு வீரமணி சென்றுவந்தார். இதனையறிந்த பெண்ணின் கணவர் பிரிந்து சென்று விட்டார். அந்த பெண் தற்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி செய்து வருகிறார். 19 வயது மகனுடன் மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். வீரமணியும், ஆசிரியையும் கடந்த 2 வருடத்திற்கு முன்பு 2020, ஏப்ரல் மாதம் ஆன்லைனில் வரும் ஆபாச படங்களை பார்த்து, அதேபோல் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது ஒரு பெண்ணுடன் 2, 3 ஆண்கள் இணையதளத்தில் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை பார்த்து, ஆசிரியை தானும் அவ்வாறு இருக்க வேண்டும். ஏற்கனவே, தனது மகனுடன் தவறான தொடர்பில் இருப்பதால், மேலும் 2 பேரை ரெடி செய்யுமாறு வீரமணியிடம் தெரிவித்தார். அதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார்.
மேலும், ஆசிரியை அப்பகுதி மாணவர்கள், பலருக்கும் டியூஷன் எடுத்திருக்கிறார். அதில் 18, 16 வயது இரு மாணவர்களுக்கு ஆபாச படங்களை காட்டி, அரை நிர்வாண கோலத்தில் மாணவர்களுடன் செல்பி எடுத்துள்ளார். இந்த செல்பியை காட்டி, மிரட்டி தனது வீட்டிற்கு இரு மாணவர்களையும் அழைத்து, தன் மகனுடன் சேர்த்து 3 பேருடனும் உல்லாசமாக இருந்துள்ளார். இதை வீரமணி செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை, ஆசிரியையுடன், வீரமணியும் சேர்ந்து அடிக்கடி ரசித்துப் பார்த்துள்ளனர். மேலும் 2 மாணவர்களையும் ஆசிரியை பலமுறை அழைத்து, உல்லாசம் அனுபவித்துள்ளார். அதை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். கடந்த 2021, ஜூன் மாதம் கொரோனா 2வது ஊரடங்கு நேரத்தில் அதை சிலருக்கு தனது செல்போனிலிருந்து வீரமணி அனுப்பி வைத்துள்ளார். மேலும் சிறுவர்கள் 3 பேரிடம் வீரமணியும், ஆசிரியையும் இதுபற்றி வெளியில் சொன்னால் மாணவர்களின் ஆபாச படத்தை இணையதளத்தில் போட்டுவிடுவோம் என்றும் மிரட்டி வந்துள்ளனர்.
இதனால் சிறுவர்கள் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளனர். இதற்கிடையில் ஆபாச வீடியோ பலருக்கும் பரவியது. இதைக் கேள்விப்பட்டு, மாணவர்கள், ஆசிரியையிடம், ‘‘நாங்கள் யாரிடமும் தெரிவிக்கவில்லை. எப்படி வீடியோ வெளியில் வந்தது’’ என்று கோபமாகக் கேட்டுள்ளனர். அதற்கு ஆசிரியையும், வீரமணியும், ‘‘யார் கேட்டாலும் தெரியாது என்று சொல்லி விடுங்கள். ஏதும் சொன்னால் கொன்று விடுவோம்’’ என மிரட்டியுள்ளனர். ஆனால், வீரமணி, தனது சகோதரி மகனுக்கு இந்த வீடியோவை அனுப்பி வைத்ததன் மூலமே இந்த வீடியோ பரவி இருப்பது விசாரணையில் தெரிந்தது. இதன்பேரில் 10க்கும் மேற்பட்ட வீடியோக்கள், பல்வேறு போட்டோக்களை பறிமுதல் செய்துள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர். இதைததொடர்ந்து ஆசிரியை, வீரமணி இருவரும் போக்சோவில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 பிரிவுகளில் வழக்கு
மதுரை அனைத்து மகளிர் தெற்கு இன்ஸ்பெக்டர் விமலாவிடம், கரிமேடு போலீசார் நேற்று வீரமணி மற்றும் ஆசிரியையை ஒப்படைத்தனர். போலீசார் இவர்கள் இருவர் மீதும் போக்சோவில் 2 பிரிவுகள் உட்பட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நேற்று மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் பல சிறுவர்கள் பாதிப்பு-
சமூக ஆர்வலர்கள் கூறும்போது, கடந்த 2 ஆண்டுகளாக இந்த பாலியல் விவகாரம் தொடர்ந்து நடந்திருக்கிறது. எனவே, இதில் எத்தனை சிறுவர்கள் பாதிப்பில் உள்ளனர். பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா? என்ற விசாரணையும் வேகப்படுத்த வேண்டும்’’ என்றனர்.
Comments
Post a Comment