பள்ளி வளாகத்தில் CCTV காமிரா உடைப்பு
தர்மபுரி மாவட்டம் அதிகாரப்பட்டி பள்ளிக்கூடம் 10 வருடத்திற்கு முன்பு கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கியது. ஆனால் தற்போது இங்கு அதற்கு எதிர்மறையாக உள்ளன. கடந்த 5 மாதத்திற்கு முன்பு பள்ளி அறைக்குள் மாட்டி வைத்திருந்த டாக்டர் அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை கிழித்து சிறுநீரகம் கழித்து செருப்பை வைத்துள்ளனர். இந்த தகவல் சுற்று வட்டார பகுதிகளில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. உடனடியாக பள்ளி நிர்வாகம் ரகசியமாக பேச்சி வார்த்தை நடத்தி இதனை மூடி மறைத்துள்ளனர்.
இது நடந்த குறுகிய காலத்திலேயே அதிகாரப்பட்டி பள்ளி நிர்வாகம் இது போன்ற செயல்களை தடுப்பதற்காக புதிதாக கண்காணிப்பு காமிராவை மாட்டியுள்ளனர். இதனை அப்பள்ளியில் படிக்கின்ற மாணவர்களே உடைத்துள்ளனர். என்று தகவல் வெளியாகியுள்ளது. தலைமை ஆசிரியரின் பெயரை கெடுக்க சதித்திட்டமாக சிலர் செயலாற்றி வருகின்றனர். இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் தலைமை ஆசிரியர் சரியில்லை உடனே அவரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்களை தூண்டுவதாக பள்ளியின் மீது அக்கறை கொண்ட மாணவர்கள் ரகசியமாக பேசிவருகின்றனர். மாவட்ட கல்வி நிர்வாகம் தலையீடு இருந்தால் மட்டுமே இதற்கான உண்மைகள் வெளிவருமென என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மாணவர்களை விசாரிப்பதில் கூட ஆசிரியர்கள் தயங்குகின்றனர். இதுபோன்ற நிலை உருவாக காரணமே ஆசிரியர்கள் பிரம்பை கீழே போட்டதன் எதிரொலிதான் என்று அப்பகுதி மக்களின் மனக்குமுறலாக இருக்கிறது ! இல்லையென்றால் மாணவர்களின் வாழ்க்கை கேள்வி குறியாக இருக்குமென்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு இதற்கொரு முடிவு எடுக்குமா? எதிர்பார்ப்பில் மாணவர்களின் பெற்றோர்கள்.
Comments
Post a Comment