ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு



தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச. திவ்யதர்ஷினி இஆப,. அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
                          


 தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏரியூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ 2.80 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வரும் பனியனையும் சுஞ்சல்நதம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ 24.54 லட்சம் மதிப்பீட்டில் புதிய நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி திவ்யதர்ஷினி இ.ஆ.ப. அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளையும் தரமாகவும் விரைவாகவும் குறிப்பிட்ட கால அளவிற்குள் விரைந்து முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது பென்னாகரம் வட்டாட்சியர் திரு அசோக் குமார் ஏரியூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திரு ஆறுமுகம் திரு ஜெயராமன் உதவி பொறியாளர் திரு சீனிவாசன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Comments