கருங்கல் கடத்தல் களத்தில் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்ச்சி - வட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பாரா ?


பாப்பிரெட்டிப்பட்டி
கனிமவளம் கடத்துபவர்கள் மீது அரசு  கடுமையான நடவடிக்கை வேண்டுமென  உயர்நீதிமன்றம் தெரிவித்தாலும் பல்வேறு இடங்களில் இன்னும் மலைகளை குடைந்து கருங்கல், செம்மண், கிராவல், போன்ற விலைமதிக்கக்கூடிய பொருட்களை தர்மபுரி மாவட்டத்தில் மறைமுகமாக கடத்தி வருகின்றனர். இதுபோன்ற தகவல் அரசு அதிகாரிகளுக்கு தெரிந்தாலும் கண்டும் காணாமல் போகின்றனர், தருமபுரி மக்கள் புலம்புகின்றனர். குறிப்பாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் சாமியாபுரம்கூட்டுரோடு அருகில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு சேர்ந்த சிறு மலைக்குன்றில் அவ்வபோது      


  பொக்லைன் மற்றும் ட்ராக்ட்டர் பயன்படுத்தி கருங்கல், செம்மண், கிராவல், கடத்திவருவதாக வந்த தகவலின் அடிப்படையில் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்ச்சி செயல் அலுவலர் N.குமுதா. பேரூராட்சி துணைத்தலைவர், V.ரவி, பேரூராட்சி கவுன்சிலர் C.மாயக்கண்ணன், மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்ததில் அருகில் உள்ள அம்புரோஸ் என்பவர் இதுபோன்று செயல்களில் ஈடுபட்டுவருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  
 
இந்த தகவல் தற்போது பாப்பிரெட்டிப்பட்டி வட்டாச்சியர் அவர்களிடம் தெரிவித்து சம்பந்தப்பட்ட நபர் மீது முறையான நடவடிக்கை எடுத்து பொருட்களின் மதிப்பீடு செய்து அதற்கான அபராத தொகையையும் வசூலிக்கப்படும் பேரூராட்சி அலுவலர் தெரிவித்தனர். என்னதான் நேரம் செலவழித்து நீதிமன்றங்களும், மாவட்ட நிர்வாகமும் மாவட்ட ஆட்சியரும் தவறுகள் செய்வோர் மீது அப்பகுதியிலுள்ள சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கு முறைப்படி தகவல் கொடுங்கள் என்று சொன்னாலும் எதும் நடக்காதவாறு குற்றுவாளிகளுக்கு துணியாக மௌனம் காத்து ஒருசில அதிகாரிகள் துணை நிற்கின்றனர். என பாப்பிரெட்டிப்பட்டி சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் இப்பகுதி அரசு ஊழியர்கள் அரசுக்கா ? இல்ல குற்றவாளிக்கா ! என்று.,  இப்படிக்கு பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர் மாயக்கண்ணன்.  

Comments