அருகே உள்ள பையர்நத்தம் பகுதியில் சூர்யா (27 ) கணவர் கோவிந்தராஜ் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. இதனால் தானாக முன் வந்து பையர்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கருத்தடைப்பு செய்ய முன்வந்துள்ளனர். இவருடன் சேர்த்து 5 பேருக்கு ( 26-03-2022 ) மருத்துவனையில் மருத்துவர்கள் கருத்தடைப்பு செய்துள்ளனர். இதில் ஒருவராக சூர்யா இருந்துள்ளார். இவருக்கு கூடுதலாக மருந்து கொடுக்கப்பட்டதாகவும் அவர் அதிகநேரம் மயக்கநிலையில் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த கணவர் கோவிந்தராஜ் காரணம் குறித்து கேள்வி எழுப்பியவுடன் அங்கிருந்த மருத்துவர்கள் பையர்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சூர்யாவிற்கு சரியான மருத்துவம் பார்க்கவில்லை, சரியாக கவனிக்கவில்லை இதனால்தான் அவர் இறந்துள்ளார் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுபற்றி பொம்மிடி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகிறது.
Comments
Post a Comment