லஞ்சம் வாங்கி ரவுடிசம் செய்யும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி

மத்திய  அரசும் மற்றும் மாநில அரசும் சேர்ந்து 
வீடு இல்லாத மக்களுக்கு இலவசமாக வீடு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் வீடு இல்லாதவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்கள் மனு கொடுக்க சென்றால் அவர்களிடம் லஞ்சமாக பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி வருவதாக தகவல் வந்த நிலையில் ரகசியமாக புலனாய்வு செய்யும்பொழுது தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி  வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பல்வேறு முறைகளில் ஊழல் செய்வதாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மாரியம்பட்டி கிராமத்தில் வசிக்கும் கனகராஜ் உடைய தம்பியிடம் ( பாரதி ) 2020 ஆம் ஆண்டு கிருஷ்ணமூர்த்தி ரூபாய் 7000 லஞ்சம் வாங்கியுள்ளார். அலுவலகத்தில் பணிபுரியும் துளசி என்கிற செல்லப்பன் கனகராஜ் முன்பு கிருஷ்ணமூர்த்தியிடம் தொடர்புகொண்டு பேசும்போது பணம் கொடுத்துவிடுகிறேன் என்றுசொல்லிவிட்டார். இதற்கு மறைமுகமாக அரசு பணியில் அல்லாத செல்லப்பன் போன்ற நபர்களால் லஞ்சம் வாங்கப்படுகிறதாக அங்கிருந்த அலுவலர்கள் கூறிகின்றனர். ஆனால் அதற்கு பிறகு எந்த நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார் கிருஷ்ணமூர்த்தி, இதனால் மனம் உடைந்த பாரதியுடைய அண்ணன் கனகராஜ் என்பவர், செய்தி போடுவதற்காக தகவல் கொடுத்தார், இதை பற்றி 11-04-2022 மாலை பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அமரவேல் அவர்களிடம்  நடந்ததை சொல்லி வெளியே வந்துவிட்டோம்.  இதனை உடனே BDO அமரவேல் ஐயா அவர்கள்  கிருஷ்ணமூர்த்தியிடம் தொடர்புகொண்டு ஏன் இப்படி செய்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் பெயரை கெடுக்குறீங்க என்று பேசியவுடன், கோபமடைந்த மாரியம்பட்டியில் வசிக்கும் கயல்நாதன் என்பவரிடம் மதுவூற்றி என்னை உங்க ஊரில் உள்ள செய்தியாளர் மணிபாரதி காட்டிக்கொடுத்து அசிங்கப்படுத்திவிட்டான் அவனை எப்படியாவது கொலை செய்திடவேண்டு என்ற நோக்கில் கயல்நாதனிடம் சொல்ல கயல்நாதனுக்கு போதை தலைக்கேறி எனக்கு தொடர்புகொண்டு ஆபாச வார்த்தைகளால் பேசி பெற்ற தாயை பற்றி ஆபாசமாக பேசியும் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினான் கயல்நாதன். இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு வீட்டிற்கு வரும் வழியில் கிருஷ்ணமூர்த்தியும் கயல்நாதனும் மிரட்டினார்கள், நான்  அதை பெரிதாக எடுக்கவில்லை வீட்டிற்கு வந்துவிட்டேன் , மீண்டு எனக்கு தொடர்பு கொண்டு வாடா தே.....ப.....லே என்று அழைத்தபின்பு நடந்ததையெல்லாம் கயல்நாதன் மனைவியாரிடம் சொல்லி முறையிட்டேன், என்னடா நீ வந்து நல்லவன் மாதிரி பேசுறேன்னு சொல்லி கையில் வைத்திருந்த சிறிய கத்தியால் எனது இடதுபுற மார்பில் கிழித்துவிட்டான்.
 ரத்தம் அதிகமாக வர ஆரம்பித்துவிட்டது. அரசு பணியில் உள்ள ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் அரசாங்கம் சம்பளம் கொடுக்கிறது,  நல்ல சலுகைகளும் வழங்கிவருகிறது,  இதற்கிடையில் தனது இச்சைக்காக மக்களுக்கு இலவசமாக கொடுக்கும் திட்டத்தில்  லஞ்சம் வாங்கி பொழப்பு நடத்தும் இப்படிப்பட்ட அதிகாரிகள் சாதாரண மனிதர்களை கூட கொலைகாரனாக மாற்றும் வகையில்  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ண மூர்த்தி இருக்கிறார் என்றால் இப்படிப்பட்டவர்களும் அரசு பணியில்  
உள்ளார்களா ?  என்ற கேள்வியாக உள்ளது.    எளிதாக கூட தனது பணியாளர்களை ஆள் வைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தலாம் என்று இந்த சம்பவத்தின் மூலம் தெரிகிறது, மத்திய அரசும், மாநில அரசும், மாவட்ட ஆட்சியரும் தீர விசாரித்து  பத்திரிக்கையாளர்களை கொலைவெறி தாக்குதல் நடத்தும் அளவிற்கு ரௌடிசம் மனம் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே  வீடு கிடைக்காமல் தவிக்கும் மக்களின் கருத்தாக உள்ளது.., 

Comments