தருமபுரி மக்களுக்கு அழைப்பு ! - மார்ச் 12ஆம் தேதி சனிக்கிழமை அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நேஷனல் லோக் அதாலத் நடைபெற உள்ளது - பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்



தர்மபுரி மாவட்டத்தில் வரும் மார்ச் 12ஆம் தேதி சனிக்கிழமை அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நேஷனல் லோக் அதாலத் நடைபெற உள்ளது.

 


  இதுகுறித்து தர்மபுரி முதன்மை மாவட்ட நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் தலைவர் ( திருமதி வி. திலகம் ) அவர்கள் தெரிவித்துள்ளதாவது மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக மாண்பமை தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின் படியும் மார்ச் மாதம் 12ஆம் தேதி சனிக்கிழமை அன்று தேசிய ( மக்கள் நீதிமன்றம் நேஷனல் லோக் அதாலத் ) நடைபெற உள்ளதை முன்னிட்டு வரும் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் சிறப்பு மக்கள் நீதிமன்றம் அமர்வு மதியம் 2 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.

 

 

சிறப்பு  மக்கள் நீதிமன்றம் அமர்வை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் வரும் மார்ச் மாதம் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த லோக் அதாலத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ளக்கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை மோசடி வழக்கு,, வங்கி கடன் வழக்கு,, தொழிலாளர் நல வழக்கு,, மற்றும் சமரச குற்ற வழக்குகள்,, சமரச முறையில் அன்றைய தினமே தீர்வு காணப்பட உள்ளது.

பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நீதிமன்றங்களில் ஆஜராகி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரச செய்து கொள்ளக்கூடிய மேற்கண்ட பிரிவு வழக்குகளில் சமரசம் செய்துகொண்டு வழக்கை முடித்துக் கொள்ளலாம்'' நீதிமன்றத்திற்கு வருகைதரும் பொதுமக்கள் covid-19 பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும், இவ்வாறு தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிபதி@ மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் தலைவர் திருமதி வி திலகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Comments