அரூர், பாப்பிரெட்டிபட்டி, பொம்மிடி பகுதியில் அனுமதியின்றி விளம்பர பேனர்

        சட்டவிரோதமாக பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும், இவற்றை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டாலும்,  அந்த உத்தரவை  ஒரு சில இடங்களில் இன்னும் பின்பற்றுபடுவதில்லை தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் பத்துக்கு மேற்பட்ட பெரிய ஜவுளி கடைகள், நகைக்கடைகள் இயங்கி வருகின்றன. 

சேலத்தில் உதயமான AVR ஜிவெல்லர்ஸ் நிறுவனம் வருகின்ற பிப்ரவரி 7 ஆம் தேதியில் அரூர் பகுதியில்  திறக்கவுள்ளதாக  அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், ,மொரப்பூர், போனற பல்வேறு பகுதிகளில்  விளம்பர பேனர் வைத்துள்ளது. இதற்க்கு மட்டும் எப்படி அதிகாரிகள் உடனே அனுமதி தற்றுகிறார்கள் என்று  அரசியல் பிரமுகர்களிடையேவும்  பொதுமக்களிடையேவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுபற்றி அரூர் கோடட்சியர் அவர்களிடம் இவர்கள் அனுமதி பெற்றுத்தான் பேனர்கள் வைத்துள்ளார்களா என விசாரித்தபோது எந்த  அனுமதியும் பெறவில்லை எனவும் இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டும் என பதில் கொடுத்தார்.

Comments