திருப்பூரில் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட இளைஞரின் தலை, குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இளைஞர் சதீஷ் தலையை போலீசார் தேடிவந்த நிலையில் எம்.எஸ்.நகரில் உள்ள குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்டது. திருப்பூரில் செல்போன் வழிப்பறியின்போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் சதீஷை தலை துண்டித்து கொன்றுள்ளனர். இளைஞர் சதீஷ் கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment