தர்மபுரி மாவட்டத்தில் அ தி மு க வினால் தி.மு.க., உற்சாகம் !

 


நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி மு க வெற்றி பெற்றது,  இதை அடுத்து

தர்மபுரி மாவட்டம், அரூர் டவுன் பஞ்சாயத்தில் மொத்தமுள்ள, 18 வார்டுகளில், அ.தி.மு.க. 7, தி.மு.க., 7, பா.ம.க. 2, சுயேச்சை, 2. வார்டுகளை கைப்பற்றியுள்ளனர். தி.மு.க.  அ.தி.மு.க., சமபலத்துடன் உள்ள நிலையில், தலைவர் பதவியை கைப்பற்ற இருதரப்பிற்கும் மேலும், மூன்று பேரின் ஆதரவு தேவை. இந்நிலையில், டவுன் பஞ். தலைவர் பதவியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடாமல் அ.தி.மு.க.,வினர் மவுனம் காக்கின்றனர். 

 


இது குறித்து அக்கட்சி நிர்வாகிகள் கூறியதாவது,  அ.தி.மு.க.,வில் தேர்தலுக்கு முன்பே, அரூர் டவுன் பஞ். தலைவர் பதவி நகர செயலாளர் அறிவழகன் மருமகள் நிவேதாவிற்கு என, முடிவு செய்து அ.தி.மு.க., களமிறங்கியது. ஏழு வார்டுகளில் அ.தி.மு.க, வெற்றி பெற்ற நிலையில், தலைவர் பதவியை கைப்பற்ற மேலும், மூன்று கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. இதற்காக சுயேச்சை கவுன்சிலர்களிடம் பேச்சு நடத்திய போது, அவர்கள் தலா, அரைகோடி ரூபாய் கேட்டதை கண்டு அ.தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். பா.ம.க., மற்றும் சுயேச்சை கவுன்சிலர்களை எப்படியாவது வளையுங்கள் என கட்சியில் இருந்து, முக்கிய நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆனால், அவர்கள் பண உதவி எதுவும் செய்யவில்லை. ஏற்கனவே, தேர்தலில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் செலவாகியுள்ளது. ஒருவேளை பணம் செலவழித்து தலைவர் பதவியை கைப்பற்றினாலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆளுங்கட்சி கவுன்சிலர்களை சமாளித்து செல்லவேண்டும். இவற்றையெல்லாம் கணக்கிட்டு தலைவர் தேர்தலில் நகர நிர்வாகிகள் மவுனம் காக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


அ.தி.மு.க.வின் மவுனத்தை சாதகமாக்கி கொண்ட தி.மு.க.,வினர் முன்னாள் டவுன் பஞ். தலைவர் தனபால் மனைவி இந்திராணியை தலைவராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, பா.ம.க. தலைவர்களிடம் பேச்சு நடத்தியுள்ளனர். மேலும், சுயேச்சை வேட்பாளர்களை வளைத்து விட்டதாக கூறி, தி.மு.க.வினர் உற்சாகமாக வலம் வருகின்றனர்...,,,,,


Comments