தர்மபுரி - கார் விபத்தில் பாப்பம்பாடியைச் சேர்ந்த இருவர் பலி


பாப்பிரெட்டிப்பட்டி
புதிய கார்வங்கிவிட்டு சேலம் தாதகாப்பட்டி கோவிலுக்கு சென்றுவிட்டு  வேடியப்பன் (50),  வேடியப்பன் மச்சினன் சக்திவேல், வேடியப்பன் மனைவி கனகா, சக்திவேல் மனைவி பூங்கொடி, , சின்னப்பையன் மனைவி கலா,  மற்றும் 3 குழந்தைகள் தங்களது சொந்த ஊரான பாப்பம்பாடிக்கு வரும் வழியில் அதிகாரப்பட்டி அருகே உள்ள ராம்நகர் பகுதியில்
மின்சாரக்கம்பம் ஏற்றி  சேலம் சென்ற லாரியின் மீது நிலைதடுமாறி நேருக்கு நேர் கார்  மோதியதில் கார் விபத்துக்குள்ளானது.  


அதிகாரப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அ. பள்ளிப்பட்டி காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்தனர் ஆம்புலன்ஸ் வருவதற்குள், பலத்தகாயம் அடைந்த வேடியப்பன், சக்திவேல் இறந்துவிட்டனர். மற்றவர்களை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது இது பற்றி அ. பள்ளிப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

                    நிருபர் சங்கீதநிலவன்

Comments