லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் வெளிவந்த படம் ‘கைதி’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இந்த படத்தின் கதை என்னுடையது என்று கேரளாவை சேர்ந்த ஒருவர் அங்கு வழக்கு தொடர்ந்தார். படத்தை வேறு மொழியில் ரீமேக் செய்வதற்கும், ‘கைதி 2’ எடுப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் படத்தின் ரீமேக் மற்றும் கைதி 2 படத்தின் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்தது. தற்போது வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ள நீதிமன்றம் வழக்கிற்கு உரிய முகாந்திரம் இல்லை என்று கூறி இடைக்கால உத்ரவை நீக்கி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. இதனால் இந்தியில் கைதி ரீமேக் பணிகள் தொடங்கி உள்ளது. கைதி 2ம் பாகம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.
Comments
Post a Comment