அரூர் பேரூராட்சியில் இன்று ஒரே நாளில் 64 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

அரூர் பேரூராட்சியில் இன்று ஒரே நாளில் 64 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.


                     
 
                        தமிழகம்   முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கான 192 இடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
 

 இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை இறுதி நாள் என்பதால், அரூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கும் போட்டியிடவுள்ள அதிமுக, திமுக, அமமுக, காங்கிரஸ், விசிக மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

   இன்று நண்பகல் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 17 வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். மேலும் அதிமுகவை சேர்ந்த 14 வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்தனர். இதேப்போல்,  அமமுகவை சேர்ந்த 13 வேட்பாளர்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அரூர் பேரூராட்சியில்  இதுவரை வேட்பாளர்கள்  மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், அரூர் பேரூராட்சியில் இன்று ஒரே நாளில் 64 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்
 
                                                                                                          நிருபர் சங்கீதநிலவன்
                                                  .

Comments