நாட்றம்பள்ளி அருகே போலீசாரிடம் சிக்கினர் சென்னையில் இருந்து 6 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேர் சிக்கினர்
நாட்றம்பள்ளி: சென்னையில் இருந்து 6 கிலோ கஞ்சா கடத்திய கிருஷ்ணகிரி
மாவட்டத்தை சேர்ந்த 2 பேரை நாட்றம்பள்ளி அருகே போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் எஸ்பி தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு நாட்றம்பள்ளி
புதுப்பேட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது
ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு ஒரே மொபட்டில் சென்ற 2
வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். இருவரும்
முன்னுக்குபின் முரணாக பேசியதால் மொபட்டை சோதனையிட்டனர். அதில் 3
பொட்டலங்களில் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.
விசாரணையில்,
பிடிபட்ட இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தூர்
பகுதியை சேர்ந்த மணிவண்ணன்(25), வெப்பாலம்பட்டி பகுதியை சேர்ந்த
கவியரசு(19) என்பது தெரியவந்தது. இருவரும் சென்னையில் இருந்து
ஜோலார்பேட்டைக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்து, பின்னர் ஜோலார்பேட்டையில்
இருந்து கிருஷ்ணகிரிக்கு மொபட்டில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து
போலீசார், இருவரையும் பிடித்து நாட்றம்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும், மொபட், 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக
நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து மணிவண்ணன், கவியரசு ஆகியோரை கைது
செய்து, திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில்
அடைத்தனர்.
Comments
Post a Comment