அமைப்பாய் திரள்வோம், மக்கள் திரட்சியும் பரிணாம வளர்ச்சியும்- பாகம் 1
ஒருமித்த பண்புகளையும் வாழ்க்கை முறையினையும் கொண்ட விலங்குகள் பறவைகள் உள்ளிட்ட ஒவ்வொரு உயிரினமும் ஒரு குழுவாக கூடி வாழ்வதே இயற்கையாகும் ! அவ்வாறே மனிதனும் இயற்கையாகவே கூடி வாழும் இயல்பைக் கொண்டிருக்கிறான்.கூட்டம் கூட்டமாக கூடி வாழ்வது ஒட்டுமொத்த உயிரினங்களின் பொதுப்பண்பு ! குடும்பம் குடும்பமாய் கூடி வாழ்வது மனித இனத்தின் சிறப்பு இயல்பு ! மந்தை மந்தையாக விளங்குவது போல் பெரும் கூட்டம் கூட்டமாய் மனிதனும் ஏதோ ஒரு பொது பண்பின் அடிப்படையில் திரளுகிறான் ! ஆனால், மனிதன் மட்டும் தன்னுடைய தேவைகளுக்காகவும் தன்னுடைய மேம்பாட்டுக்காகவும் எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய பாதுகாப்பாகவும் தன்னை நெறிப்படுத்திக் கொள்ள தொடர்ந்து முயற்சித்து கொண்டிருக்கிறான்.

அவ்வாறு, மனிதன் மேற்கொள்ளும் தொடர் முயற்சிகளால் 'நெறிப்படுத்துதல்' என்னும் தொடர் நடவடிக்கைகளால், மனிதனின் கூடி வாழும் போக்குகளில் பண்பு மாற்றங்கள் நிகழ்கின்றன. அதனால் 'கூட்டம் கூட்டமாய்' என்கிற மந்தை போக்கு மாறி, மிகவும் குறிப்பான பொதுப் பண்புகளையும் பொது குறிக்கோள்களையும் அடிப்படையாகக் கொண்டு 'குழுக்குழுவாக' பிரிந்தும் இணைந்தும் இயங்குகிற போக்கு உருவாக்குகிறது. இது முற்போக்கான அடுத்த பரிணாம நிலையே ஆகும்.
மனிதனின் 'நெறிப்படுத்தல்' மேலும் மேலும் கூர்மையடைந்து, மிகமிகப் குறிப்பான பொதுப் பண்புகளையும் நெருக்கமான உறவினை பண்புகளையும் இனிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு 'குடும்பம் குடும்பமாய்' வாழும் செழுமை அடைகிறது அதாவது மனிதனின் வாழ்க்கைப் போக்கில் கால சுழற்சியில் அவ்வப்போது அதனடிப்படையில் வளர்ச்சிமற்றும் பாதுகாப்பின் அடிப்படையில் இயற்கையாகவே அமையப்பெற்றுள்ள உணர்வு சார்ந்த உறவுகளின் அடிப்படையில் கூடி வாழ்தல் என்னும் இயங்கியல் போக்கினில், கூட்டம் - குழு - குடும்பம்' என்கிற பரிணாமப் படிநிலைகளை சந்திக்கிறான். இது 'நெறிப்படுத்தல்' என்னும் முயற்சி மற்றும் உழைப்பு விளைவுகளாகும்.
தமக்கான தேவைகளை வரையறுப்பது அவற்றை தேடுவது மற்றும் உற்பத்தி செய்வதும், அத்துடன் தமக்கான மேம்பாடு மற்றும் பாதுகாப்பை நிலைப்படுத்தும் போன்ற தொடர் நடவடிக்கைகளை மனிதன் அல்லது அவன் சார்ந்த குழுவோ அல்லது குடும்பமோ மேற்கொள்கின்ற போது அவற்றை நெறிப்படுத்த வேண்டிய தேவை எழுகிறது அத்தகைய நெறிமுறை படுத்துதல் என்னும் நடவடிக்கையின் போக்கில் கொள்கை - கோட்பாடு - குறிக்கோள் - இலக்கு, சட்டம் விதிகள் விசாரணை தண்டனை போன்ற வரையறைகள் உருவாகின்றன.
இவ்வாறான வரையறைகளின் அடிப்படையில் தான் மனித குழுக்களிலிருந்து 'அமைப்பு' என்கிற வடிவம் உருப்பெறுகிறது அந்த வகையில், குடும்பம் என்பது ஒரு அமைப்பு! தேசம் என்பது ஒரு அமைப்பு! சாதி, மதம், இனம் போன்ற வடிவங்களும் அமைப்புகளே ஆகும்! இவற்றையெல்லாம் ஆளும் ஆளுமை செய்கிற அரசும் ஓர் அமைப்பே ஆகும்! 'குடும்பம்' என்னும் அமைப்பிற்கும் 'அரசு' என்னும் அமைப்பிற்கும் இயல்பாகவே ஏற்பட்டிருக்கும் மனிதன், சாதி, மதம், இனம், போன்ற அமைப்புகளிலும் அவன் விரும்பியோ விரும்பாமலோ சேர்ந்து இயங்குகிறான் குடும்பமும் அரசு மிகுந்த சுமையாகவும் வலியாகவும் நெறிப்படுத்தப்பட்ட நிலையான அமைப்புகள் ஆகும் வடிவத்திலும் அளவிலும் சிறியதொரு அழகாக அமையப்பெற்றுள்ள குடும்பம் என்கிற அமைப்பு சாதி, மத, இன, வழி அமைப்புகளின் சமூக பண்பாட்டுக் கூறுகள் மிகுதியாக கொண்டு விளங்குகின்றன குடும்பத்தின் பொருளாதார கூறுகளும் அரசியல் கூறுகளும் அதன் வலிமையையும் ஆளுமை தீர்மானிக்கின்றன அதாவது சமூக பண்பாட்டு உறவுகளின் அடிப்படையில் ஒரு குடும்பம் அமைப்பின் தகுதியும் பொருளாதார அரசியல் உறவுகளின் அடிப்படையில் அதன் வலிமையும் திரிகின்றன ஒரு மனிதனின் பிறப்பு அவனை அவன் பிறந்த குடும்பம் அமைப்பின் உறுப்பினர் ஆகி விடுகிறது அதனால் அவன் அறிந்தோ அறியாமலோ அல்லது விரும்பியோ விரும்பாமலோ அந்த குடும்பத்தின் சமூகத்திற்கு ஏற்ப தகுதிக்கேற்ப சமூக மரபுகள் மற்றும் அவர்களுக்கு கட்டுப்பட்டு இயங்குகிறான் இத்தகைய மரபுகளும் வழக்காறுகளும் குடும்பம் அமைப்புக்கான சட்டங்களை சட்டங்களும் விதிகளும் அமைய பெறுகின்றன சாதியும், மதமும், அவன் சார்ந்த இடமும் குடும்பத்தின் மீது பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன சாதிக்க சில மரபுகளும் வழக்குகளும் வழிவழியாக நடைமுறையிலிருந்து அவற்றை தனது சட்டம் மற்றும் விதிமுறைகள் ஆகவே ஏற்று சாதி இயங்கி வருகிறது அதாவது 'குடும்பம்' என்கிற அமைப்பின் விரிவான - வலுவான - பெருந்திரளான வடிவமே 'சாதி' என்கிற அமைப்பு ஆகும். இத்தகைய 'சாதி' அமைப்பின் உறுப்பினராக இருந்து அதற்கான அடையாளத்தை சுமக்க வேண்டிய பொறுப்பை அவன் சார்ந்த சமூக கூட்டமைப்பு திணிக்கிறது. சமூக கூட்டமைப்பானது குடும்பம் 'சாதி' என்கிற அமைப்புகளை உள்ளடக்கிய அவற்றின்மீது மேலாண்மை செலுத்துகிற இன்னொரு பேர் அமைப்பை பேரமைப்பின் அடிப்படையாகக் கொண்டு வடிவம் பெற்று அமைந்துள்ளது அந்த பேரமைப்பு தான் 'மதம்' என்னும் சமூக பண்பாட்டு உறவுகளை தீர்மானிக்கும் ஆளுமை வாய்ந்த அமைப்பாக விளங்குகிறது.


Comments
Post a Comment