பெண்கள் விழிப்புணர்வுக்காக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் IPS சி. கலைச்செல்வன் குறும்படத்தை வெளியீடு செய்தார் !

தருமபுரி:-

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. 



இதில் தருமபுரி மட்டும் விதிவிலக்கல்ல, இது போன்ற குற்றங்களை தடுப்பதற்கு தருமபுரியில் மாவட்ட ஆட்சியர், குழந்தைகள் நலத்துறை, மற்றும்  காவல் துறை சார்பில் துண்டுப்பிரசுரம், சுவரொட்டிகள் மூலம் விழிப்புணர்வுகள் ஏற்படடுத்தி வருகின்றனர். 



                 தற்போது பெண்கள், குழந்தைகள், யூ-டியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதன் வாயிலாகவும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், குறும்படமூலமாக  விழிப்புணர்வு ஏற்படடுத்த முடிவு செய்து "நீயேதான் உனக்கு துணை" என்ற குறும்படத்தை வெளியிடுகிறோம். இக்கதையின் நோக்கம் ஒரு பெண் தன்னுடைய பிரச்சனைகளை முதலில் தானே தைரியமாக கையாளவேண்டும் என்பதை பற்றி சொல்லும் கதை. 


             சமூகத்தின் மீது அக்கறைக்கொண்டு இக்கதையை  தயாரித்து கொடுத்த ஸ்டான்லி கல்வி நிறுவனத்தலைவர் வி, முருகேசன், பிரு ஆனந்த் அவர்கள் மற்றும், அடிக்கடி தருமபுரி மாவட்ட ஆட்சியர் பெண்களிடம் விழிப்புணர்வுக்காக  சொல்லிய கருத்தை வைத்து இக்கதையை இயக்கியுள்ள  இயக்குனர், எம்.எஸ்.பி. மணிபாரதி. அவர்களை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.  கலைச்செல்வன், IPS, மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற பிரிவு ஏ டி எஸ் பி குணசேகரன், மற்றும் புதுக்கோட்டை டி.எஸ்.பி.லில்லி கிரேஸி , வெளியீடு செய்து பாராட்டியுள்ளனர்.


Comments