வாகன விபத்தில் ஒருவர் பலி

பாப்பிரெட்டிப்பட்டி 
முழு ஊரடங்கு நாளான இன்று விடியற் காலையில் நேரத்தில் மனைவி பிரியாவை (26) சந்திப்பதற்காக தமிழரசன் ( 28 )  பையர்நத்தத்தில் இருந்து மாரியம்பட்டி கிராமத்திற்கு சென்றுள்ளார் செல்லும் வழியில் அதிகாரப்பட்டி புதுபாலம் அருகில் உள்ள அபாயகரமான வலைவில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள கல்லின் மீது மோதி பலத்த காயமடைந்தார். அருகில் உள்ளவர்கள் அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்த பிறகு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். பலத்த காயம் அடைந்த தமிழரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பற்றி அ. பள்ளிபட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Comments