பொதுமக்களின் உயிர்மீது விளையாடும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் திருப்பூர் மாநகராட்சியின் அவலநிலையும் மெத்தன போக்கும்
ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் பல்வேறு இடங்களில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சாலை பராமரிப்பு பாதாள சாக்கடை பராமரிப்பு நடந்து வருகிறது இதில் பொது மக்களின் உயிர் மீது கவனமில்லாமல் வேலைப்பாடுகள் நடந்து வருகிறது பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு கால் கை சேதம் ஏற்பட்டுள்ளது இந்தநிலையில் திருப்பூர் எம் எஸ் நகர் பள்ளிவாசல் சாலையில் வி எஸ் கே நகர் சந்தில் பாதாள சாக்கடை மேல் மூடி மூடாமல் இரவில் ஒருவர் அந்த பாதாள சாக்கடை தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தார் இதை அறிந்த காவல்துறையினர் உடனடியாக சென்று பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் மேற்கொண்டு இறந்தவர் பற்றி இன்னும் முழுவிபரம் தெரியவில்லை இனிவரும் காலங்களிலாவது திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் உயிர் மீது கவனம் வைத்து செயல்பட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
வருமுன் காப்போம் என்பது நல்லது வந்தபின் பார்ப்போம் என்பது??
பொதுமக்கள் நலன் கருதி திருப்பூர்மாவட்டம் முன் களப்பணியாளர்📷🖋️
Comments
Post a Comment