தர்மபுரி-அதிகாரப்பட்டி
இந்தியாவில் பல்வேறு நோய் தொற்றுகளில் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். அதில் அதிதிகமாக ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சனைக்குள்ளானவர்கள் அதிகம் என 2020 ஆண்டின் கணக்கெடுப்பில் சொல்லப்படுகிறதுது. அதற்கான காரணம் காற்றை மாசுபடுத்தக்கூடிய நிறுவனம் மற்றும் குப்பைக்கிடங்கில் வெளியேறும் புகையின் துர்நாற்றம் ஆகும். இதுபோன்ற நிகழ்வு நகர்ப்பகுதியில்தான் உண்டு என்பதை அறிந்தோம் தற்போது அந்த நிகழ்வுகள் கிராமப்புற பகுதியிலும் வந்துவிட்டடது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அதிகாரப்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட மாரியம்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் அதிகமான குப்பைகளை கொட்டி தீயிட்டு கொளுத்தி வருகிறது பஞ்சாயத்து நிர்வாகம். அது 24 மணிநேரமும் எரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. குப்பைகள் கொட்டி வைக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பயன்படுத்துவதில்லை. குப்பைகள் எரியும் அதே வழியில்தான் அப்பகுதி கிராமமக்களும் அதிகாரப்பட்டி சார்ந்த மக்கள் தங்கள் விவசாய நிலத்திற்கும் சென்று வருகின்றனர். இதனால் குழந்தைகளுக்கும், பள்ளிமாணவர்களுக்கும் , பெரியவர்களுக்கும் நோய் தாக்கத்தை கூடியவிரைவில் ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் மாரியம்பட்டி கிராம மக்கள் புலம்பிவருகின்றனர். முக்கியமாக பஞ்சாயத்து தலைவரான யசோதா ஜெயராமன் மற்றும் அவரது கணவர் ஜெயராமன் சென்றுவருகிறார்கள். இவர்கள் இந்த கொடுமைகளைக்கண்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கிராம மக்களிடையே பேரதிர்ச்சியாக உள்ளது. ஆற்று நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்ட்டுள்ளது.
தாசில்தார் வரவில்லை, வட்டார வளர்ச்சி அலுவலர் வரவில்லை, எல்லாத்துக்கும் கலெக்டர்தான் வரணுமா கீழ இருக்குற அதிகாரிகள் என்னதான் செய்யுறாங்க ? அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு மக்களுக்கு நோய்களை பரப்பும் பஞ்சாயத்து நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments
Post a Comment