மாவட்ட ஆட்சியர் அம்மா யாரையும் நம்பாதீங்க - தருமபுரி மாவட்ட ஆட்சியரை நம்பிக்கையோடு கெஞ்சும் விவசாயிகள்

                                                            

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அ பள்ளிப்பட்டி உட்பட்ட போடுவராயன் பெருமாள் கோவில் மலைப்பகுதியின் உச்சியில் இருந்து வெளியேறும் மழைநீர் பெருமப்பள்ளம் வழியாக காலம் காலமாக வழிந்தோடுகிறது. மலையின் அடிவாரப்பகுதியின் தொடக்கத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதால் தற்போது அப்பகுதியில்  விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.40 வருடங்களுக்கு முன்பு  பெரும்பள்ளம் வழியாக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்வழி பாதைவழியே  மழை நீர் அ. பள்ளிப்பட்டி சின்னேரியில் சேரும் இந்த சின்னேரியில் நீர்நிலைகள் நிரம்பினால் அதனை சுற்றியுள்ள  சுமார் 2300 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.அதுமட்டுமல்லாமல் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் இயங்கிவரும் வரலட்சுமி கிழங்கு மில் நிறுவனத்தால் வெளியேறும் கழிவு நீரால் விவசாயம் மற்றும் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது, இதை ஒரு அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது.  இது ஒரு பக்கம் இருக்க சின்னேரிக்கு வரும் மழை நீரை ஒரு சிலர்  விவசாயம் என்ற பேரில் நீர்வழிப்பாதையை தடுத்து நிறுத்திவிட்டனர். 
இதனால் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் விவசாயம் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக சர்வே எண் (233-ல் -3-B) 1- ஏக்கர் 24- சென்ட் நிலம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்கால் என்று சொல்லப்படுகிறது. அதன் தொடர்ச்சியிலிருந்து சின்னேரிக்கு வரும் நீர்வழிப்பாதை என்று கிராம சர்வே எண் புலப்படத்தில் வரைபடமாகவே உள்ளது. பொதுப்பணித்துறை வாய்க்காலை தொடர்ந்து வரும் நிலம் தற்போது இருளப்பட்டியில் ஊராட்சி செயலாளராக சேட்டு என்பவரின் தந்தை நடராஜ் பெரியப்பா சுப்பிரமணி மற்றும் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களின் சொத்தாக உள்ளது என கூறப்படுகிறது.
சேட்டு என்பவர் ஒன்றை ஆண்டுக்கு முன்புவரை அ பள்ளிப்பட்டி ஊராட்சி செயலாளராக இருந்தார். தற்போது இருளப்பட்டி ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஊராட்சி செயலாளராக சேர்ந்து சுமார் 10 வருடம் ஆகிறது. -சேட்டு குடும்பத்தார் 1983 இல் நிலம் வாங்கியுள்ளனர். 

இவர்கள் நிலம் வாங்கிய காலத்தில்கூட நிலத்தின் அருகாமையில் உள்ள நீர்வழிப்பாதையில்தான் மழைநீர்கள் சென்று அ பள்ளிப்பட்டி சின்னேரி பகுதியில் சென்றடையுமாம். சிறிது காலம் கடந்த பின்பு மழை பொழியாத நேரத்தில் வறண்டுகிடந்த  நீர்வழிப்பாதையை சேட்டு ஊராட்சி செயலாளராக பணியாற்றியபோது  ஆக்கிரமைப்பு செய்துள்ளார். இவரை பார்த்து அடுத்த உள்ள நில உரிமையாளர்களும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். சேட்டு குடும்பம் விலைக்கு வாங்கப்பட்ட நிலத்தின் சர்வே எண்ணில் மற்றும் அருகாமையில் வருவாய்த்துறை உள்ள ஒரு சில சர்வே எண்ணில்  நீர்வழிப்பாதை இல்லை. ஆனால் நிலவியல்பாதை இருக்கிறதாம்.  அந்த நிலவியல்பாதை  சரியாக பொதுப்பணித்துறையின் துறைக்கு சொந்தமான பெரும்பள்ளம் வாய்க்காலுக்கு சென்றடைகிறதாம். வருவாய்த்துறை UDR -க்கு முன்பு இருந்த FMB- இல் நிலமெல்லாம் தரிசாக இருந்துள்ளது என்று கூறப்படுகிறது அதாவது அரசு நிலமாக இருந்துள்ளதாம். அப்போது இந்த நிலம் இவர்கள் கையில் வரும்போது பொதுப்பாதையை (நிலவியல்பாதை) இவர்களுடைய பட்டாவில் அப்போது அதிகாரிகளின் துணையோடு `ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். 4 சர்வே எண்களில் தற்போது இல்லாத சூழலில் அதற்கு கீழ் உள்ள சர்வே எண்ணிற்குட்டபட்ட நிலத்தில் நீர்வழிப்பாதை தற்போது இருந்துவருகிறது. என்பது நேரில் சென்று ஆய்வு செய்தபோது உறுதியாகியுள்ளது. கால்வாய்கள் தற்போதும் உள்ளது மற்றும் கல்வெட்டுகள், தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளனர்.   இது பற்றி கிராம மக்கள் கூறுகையில் இந்த முறை பருவமழை பெய்ததால்  நாங்கள் மழைநீர் வீணாவதை தடுக்க நீர்வழிப்பாதையை மீட்டெடுக்கவும்  அ பள்ளிப்பட்டி ஊர் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர்  திவ்யதர்சினி அம்மா  அவர்களிடம் மனு கொடுத்துள்ளோம் .அது மட்டுமல்லாமல் கோடட்சியர், வட்டாட்சியர்,கிராம அலுவலர் அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தபின்பு விரைவாக அரூர் கோட்டாட்சியர் முறையாக இருதரப்பையும் அழைத்து பேச்சி வார்த்தை நடத்தி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தை சேட்டு மற்றும் அருகிலுள்ள சிலபேர் ஆக்கிரமிப்பு செய்து மஞ்சள்,பாக்கு மரங்களை வளர்த்து வருகின்றனர்.உடனடியாக பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை  அகற்றி சின்னேரிக்கு நீர் கொண்டு வரவேண்டும் என வட்டாட்சியருக்கு அறிவுறை வழங்கினார்.  பின்பு ஆக்கிரமிப்பு செய்துள்ள சேட்டின் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என பிடிஓ-வை பார்த்து கேட்டார். பிறகு கோட்டாட்சியர் கூறிய அறிவுரையை எற்றுக்கொண்ட வட்டாட்சியர் மற்றும் கிராம அலுவலர் மழை என்பதை காரணம்காட்டி நில அளவியர்கள் வர மறுக்கிறார்கள் என பணியை தள்ளி வைத்துள்ளனர். 
 
அதற்கு பிறகு மீண்டும் ஊர் பொதுமக்கள் சார்பாக  கடந்த 2021 -டிசம்பர் 20 ஆம் தேதி மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுவை கொடுத்தோம் மனுவை பெற்று சேட்டு என்பவர் ஊராட்சி செயலாளரான பின்பு பதவியின் அதிகாரத்தை வைத்து இது போன்ற ஊழலில் ஈடுபட்டதை கண்டு  மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சியாகி  உடனடியாக வட்டாட்சியருக்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், நேரடியாக உத்தரவிட்டு பஞ்சாயத்து செயலாளர்தான் ஊராட்சிக்கு சொந்தமான  நீர்நிலைகளை

பாதுகாக்கவேண்டும். அவரிடம் சொல்லி மக்கள் சொல்லிய பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு  உடனடியாக தீர்வு கொண்டுவரவேண்டு மற்றும் ஆக்கிரமிப்புகளை அவரை  உடனடியாக ஒருவாரத்தில் அகற்றவேண்டுமென சொல்லுங்கள் இல்லையென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அம்மா சொன்னாங்க.
நாட்கள் கடந்த பின்பும் எந்த ஒரு மாற்றமும் செய்லபடவில்லை இதனால்  மாவட்ட ஆட்சியர் சொல்லிய உத்தரவு இருளப்பட்டி ஊராட்சி செயலாளர் சேட்டுக்கு சேரவில்லை என்பதை கருத்தில் கொண்டு மீண்டும், 24-12-2021 விவசாய குறைதீர்க்கும் கூட்டத்தில் ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலரை அழைத்து போன திங்கள்கிழமை இந்த மனுவிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார். வட்டார வளர்ச்சி அலுவலரிடமிருந்து முறையான பதில் இல்லாததால் உடனடியாக ஊராட்சி செயலாளர் சேட்டுவை சஸ்பெண்ட் செய்து எனக்கு தகவல் கொடுங்க அப்படி செயலாளரை பணியிடை நீக்கம் செய்யவில்லை என்றால் அடுத்து திங்கள்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலரை சஸ்பெண்ட் செய்துவிடுவேன்  அதுமட்டுமல்லாமல் சின்னேரிக்கு உடனடியாக தண்ணீரை வரவைக்கணும்னு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அம்மா ஸ்டிர்ட்டா சொல்லிட்டாங்க. இந்த அடிப்படையில் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் டிசம்பர் 24 ஆம் தேதி சேட்டுவை சஸ்பெண்ட் செய்கிறார். அதற்கு பிறகு 27 - ஆம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் சுப்பிரமணி அவர்களை ஊர் பொதுமக்கள் சந்திக்கும்போது,  முதல்வர் நிகழ்ச்சி சனவரி இருப்பதால் கொஞ்சம் பணிகள் அதிகமாக உள்ளது. அதனால் சர்வேயர் வருவதில் கொஞ்சம் கடினம் இருக்கு. முதல்வர் நிகழ்ச்சி முடிந்தபிறகு இந்த வேலையை சனவரிக்கு 3 ஆம் தேதிக்கு மேல் பாதையையும் ஏரி நிலத்தையும் அளந்து தருகிறேன்னு பாப்பிரெட்டிப்பட்டி வட்டாச்சியர் சுப்பிரமணி தெரிவித்தார். அதுக்கப்புறம் கோட்டாட்சியரிடம் பேசினோம், கோட்டாட்சியரும் இந்த வார இறுதியில் நிலம் அளப்பதற்கு பணியாளர்களை அனுப்புகிறேன் என்றார். ஆனால் திடீரென  அன்று (திங்கள்கிழமை) மாலை  7-20 மணிக்கு கிராம நிர்வாக அதிகாரி ராஜா அவர்கள்  பஞ்சாயத்து தலைவரை தொடர்பு கொண்டு நாளை காலை ஏரியை அளக்க வருகிறார்கள் என்று தகவல் தெரிவித்தார்.  மனுக்கள் யார் கொடுத்தார்களோ அவர்களிடம் சொல்லாமல் ஊராட்சி மன்ற தலைவரிடம் கிராம அலுவலர் ராஜா தெரிவித்தார். இதனை அறிந்த  மனு கொடுத்த பன்னீர்செல்வம், சேட்டு, மற்றும் விவசாயிகள் , ஊர்பொதுமக்கள்  கிராம அலுவலரை நினைத்து அதிர்ச்சியடைந்தனர். முறையாக மனு கொடுத்த எங்களிடம் தகவல் ஏதும் கொடுக்கவில்லை என கிராம அலுவலர் ராஜா மீது விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அடுத்த நாள் சர்வேயர் வரும்பொழுது   அப்போது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒரு சில ஊர் பொதுமக்களும் முதலில் பெரும்பள்ளத்தையும் நிலவியல் பாதையை அளந்து பிறகு ஏரியை  அளக்கலாம் என்று கூறியுள்ளனர். அப்போது திடீரென வந்த  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மறுப்பு தெரிவித்து ஏரி நிலத்தை அளந்து விடலாம் என விவாதம் செய்துள்ளார். அங்கே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி  இருந்தது அப்பகுதி விவசாயிகளிடையே மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் ஏன் இங்க வரணும் என்ற கேள்வி ஒரு புரியாத புதிராக உள்ளது என்றார்கள் விவசாயிகள். VAO ராஜாவும் இன்று ஏரியை அளக்கலாம் நாளை பாதையை அளக்கலாம் என்றார், சரி ஓகே நீங்கள் சொல்வது போல ஏரி நிலத்தை முதலில் அளந்து பிறகு நீர்வழிப்பாதையை அளந்து விடுங்கள் என விவசாயிகள் ஒப்புக்கொண்டனர். எல்லாத்துக்கும் சரி என்று சொல்லிவிட்டு ஏரியை அளந்த பிறகு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிராம அலுவலர் பேச்சை கேட்டுக்கொண்டு அடுத்தநாள் நீர்வழிப்பாதையை அளக்க வருவதாக கூறி ஊர் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும்  நாமத்தை போட்டுள்ளனர்­­­. ஆனால் ஏரியை அளந்ததற்கான எல்லை அடையாள கல் நடவில்லை மாறாக மறுநாள் காலையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மட்டும் அ பள்ளிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருகிறார். அப்போது அங்கே கூடியிருந்த ஊர்பொதுமக்கள் சார் எவ்ளோ நேரத்திற்கு பாதையை அளக்க சர்வேயர்கள் வராங்க என்று கேட்க அவர் நான் இப்போது நேற்று அளந்ததர்கான சர்ட்விக்கெட்டை வாங்க வந்துள்ளேன்.

இதை வைத்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை தரவேண்டும் என்றார். நீங்க ஏன் சார் நீங்க பேச்சை மாத்தி பேசுறீங்க நேத்து ஏரியை அளந்துட்டு இன்னைக்கு பாதையை அளக்கறதாதான VAO சொன்னாரு. என்று நாங்கள் கேட்டவுடன் கிருஷ்ணமூர்த்தி VAO வை தொடர்பு கொண்டு சார் இன்னைக்கு சர்வேயர் எவ்ளோ நேரத்திற்கு வர்றாங்கனு கேட்டாரு, ஆனா VAO அப்படி ஏதும் தகவல் இல்லைனும் சொல்லிட்டாரு. இன்னைக்கு அளந்தர்லாம்னு நேத்து சொன்னிங்க. இன்னைக்கு என்னசார் இப்படி சொல்றிங்கனும் நாங்க கேட்டதுக்கு எனக்கு அது வேல இல்லைங்க என்னுடைய வேல சேட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளாரா இல்லையானும் VAO விடம் சர்டிவிக்கெட் வாங்கி கலெக்டருக்கு அனுப்பனும். நேத்து சேட்டு நிலத்தை அளந்தனும் சொன்னிங்களே அதுல சேட்டு குடும்பத்தார் ஆக்கிரமிப்பு செஞ்சிருக்காங்களா இல்லையா? சேட்டு  பேரில் ஆக்கிரமிப்பு இல்ல அந்த நிலம் ரேவதி பேர்ல இருக்கனும் கிருஷ்ணமூர்த்தி சொன்னாரு, சார் ரேவதி என்பவர் சேட்டுடைய அண்ணன் மனைவி அதுமட்டுமல்லாமல் சேட்டுடைய மனைவி பெயர் கூட ரேவதிதான் இவங்கெல்லாம் ஒரே குடும்பம்தான் சார்னு நாங்க சொன்னோம் அதற்கு கிருஷ்ணமூர்த்தி அதெல்லாம் என்னோட வேல அத நான் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டாரு.  இதிலிருந்து என்ன தெரியுதுனா ஊராட்சி செயலாளர் சேட்டு ஆக்கிரமைப்பு செய்த நிலங்கள், நீர்வழிப்பாதைகள், அரசை ஏமாற்றி வேறொருவரின் பெயரில் தனது சொந்தகாரங்க நிலத்தில் வீடுகட்டிய போன்ற பல்வேறு ஊழலுக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலரும் கிராம அலுவலர் ராஜாவும் துணையாக இருப்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. இவர்கள் திட்டமிட்டு ஏரி நிலத்தை மட்டும் அளப்பதற்கான காரணம் ஏரி நிலத்தை முதலில்  அளந்துவிட்டு ஆக்கிரமிப்பு செய்த நிலங்கள் மீட்கப்பட்டது என மாவட்ட ஆட்சியருக்கும் கோட்டாட்சியருக்கும் பணிகள் முடிந்துவிட்டது என்று  தகவல் கொடுத்துவிட்டால் பெரும்பள்ளம் அருகே ஆக்கிரமிப்பு செய்த நிலங்களும் அளந்துவிட்டதென்று சான்றிதழை வழங்கிவிட்டால் ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியரோ கோட்டாட்ச்சியரோ வந்து ஆய்வு செய்வதற்கு வாய்ப்பில்லை பிறகு சஸ்பெண்ட் ஆன ஊராட்சி செயலாளர் சேட்டு மீண்டும் பணிக்கு சேர்ந்துவிடுவார் என்ற திட்டத்தோடு மாவட்ட ஆட்சியர் கண்ணை கட்டியும் கோட்டாட்சியர் கண்ணை கட்டியும்

7-ஆம் அறிவை பெற்றவர்கள் போல ராஜா, கிருஷ்ணமூர்த்தி,சேட்டு,மூவரும் ஊழல் விளையாட்டை விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் 7 ஆம் அறிவுக்கு பொதுப்பணித்துறையின் வாய்க்காலை ஆக்கிரமித்து மஞ்சள் பாக்கு மரங்கள் பயிரிட்டுள்ளதை சேட்டு அகற்றி கொள்ளவேண்டுமென 31-12-2021 அன்று  பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கொடுத்த எச்சரிக்கை கடிதம்  தெரியாமல் போய்விட்டது. அதிகாரிகளை நம்பி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள் அந்த கோரிக்கையை உடனடியாக ஆய்வு செய்து அதற்கான தீர்வு காணுங்கள் என்று அதே அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆணையிடுகிறார். ஆனால் இந்த அதிகாரிகள் மக்களுக்கும் தீர்வுகாணாமலும் மாவட்ட ஆட்சியரின் ஆனைக்கும் மதிப்பளிக்காமல் இருந்தால் இந்த ஊரு விளங்குமா ? என்ற கேள்வி குறி எழுகிறது. கோட்டாட்சியர் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் அம்மா நீங்க எந்த அதிகாரியும் நம்பாதீங்க இவங்க எல்லாம் காலத்தை கடத்தி உங்களை ஏமாற்றுகிறார்கள். தயவு செய்து நீங்கள் வாருங்கள் இந்த ஊழல் கொடுமைகளுக்கும் நிலம் சுரண்டும் கொல்லைக்கும் நீங்கள்தான் முடிவுகட்டவேண்டும் என கையெடுத்து கெஞ்சியபடி அ பள்ளிப்பட்டி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி வருவாரா அவரையும் அரசையும் ஏமாற்றி  ஊழல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா விவசாயிகளுக்கு விடியல் கிடைக்குமா எதிர்பார்ப்புகளுடன் அ பள்ளிப்பட்டி ஊர்பொதுமக்கள்

Comments