தருமபுரி மாவட்டம்,23.1.22
அதிமுக ஆட்சியில் தரமற்ற நெல்லே கொள்முதல் செய்யப்பட்டது... தமிழ்நாடு பச்சரிசி அரவை முகவர்கள் நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பாஸ்கர் குற்றச்சாட்டு..
தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பாஸ்கர், கடந்த அதிமுக ஆட்சியில் பொதுவிநியோக திட்டத்திற்கு அரசி வழங்க கொள்முதல் செய்யட்டது தரமில்லாததாகவே இருந்ததாகவும், சாக்கு பை கொள்முதலிலும் கூட முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றசாட்டை முன் வைத்த அவர், தற்போதுள்ள தமிழக அரசு மக்களுக்கு வழங்க கூடிய அரசி தரமானதாக வழங்கவேண்டும் என்பதில் தீவரம் காட்டி அதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் தெரிவித்தார்,
சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சிலரது முயற்சியால் தனது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது, தனக்கும் கே பி அன்பழகனுக்கும்,அரசியல் ரீதியாகவோ, தொழில் ரீதியாகவே எந்தவித தொடர்பும் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ள பாஸ்கர், பாலக்கோடு தொகுதியில் டெண்டர் விடபட்ட சாலை பணியை செய்திடாதவாறு தடுத்தவர், கடந்த பத்து வருடங்களாக சாலை ஒப்பந்த பணிகளை தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் கிடைத்துவிடாமலும், செய்ததோடு அதிகாரிகளை மிரட்டி நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை தனது குடு்ம்பத்தாருக்கும், பிணாமி பெயர்களுக்குமே செய்து கொடுத்தும் தருமபுரி மாவட்ட மக்களுக்கும், தொகுதி மக்களுக்குமே தூரோகம் செய்தவர்.தான் முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன், என தெரிவித்தார்...
பேட்டி.. பாஸ்கர், மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு பச்சரிசி அரவை முகவர்கள் நலச்சங்கம்..
Comments
Post a Comment