11 கோடியா !-? முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தருமபுரி மாவட்டம் 

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடர்புடைய 59 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

                                           அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடர்புடைய 59 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை சென்னை, தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. கே.பி அன்பழகன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த கால ஆட்சியில் ஊழல் லஞ்சம், மற்றும் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த புகார்களில் முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவராக  சிக்கி வருகிறார்கள்.. இந்த புகார்களின் மீது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். 

                                            அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, தங்கமணி, கேசி வீரமணி, எம். ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.. அந்த சோதனைகளில் எல்லாம், கணக்கில் வராத ரொக்கம் பணம் , நகைகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது..
 
                                           இந்தநிலையில் அந்த வரிசை பட்டியலில், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் என மொத்தம் 59 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.  

இன்று அதிகாலையில் இருந்தே கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்... 

அன்பழகன் 2016-21 ல் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது வருவாய்க்கு பொருந்தாத வகையில் சொத்து குவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக கே.பி அன்பழகன்,  மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திர மோகன், மருமகள் வைஸ்னவி ஆகியோர்   5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருகிறது.
 கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களிலும் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, கே.பி. அன்பழகன் மைத்துனர் பொன்னுவேல், அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து வருகிறது.
இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments