தருமபுரி மாவட்டத்தில் 68 மதுபானக்கடைகள் உள்ளன பல்வேறு இடங்களில் அரசு மதுபானக்கடைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் கிராமப்புறங்களில் கள்ளத்தனமாக விற்பதற்கு உதவி செய்துவருகின்றனர். என்று மக்கள் பல்வேறு இடங்களில் பேசியதை பற்றி அரசு மதுபான கடைக்கு மேனேஜராக இருக்கும் மாவட்ட அதிகாரிகள் ஆதாரம் இல்லாமல் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என கூறி வந்த நிலையில், தற்போது ஆதாரமாக இணையதளத்தில் மதுபானக்கடையில் பணியாற்றும் அரசு ஊழியரே கள்ளத்தனத்தில் விற்பதற்கு பாட்டில் எடுத்து பெட்டிக்குள் அடுக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் பரவிவருகிறது. இது பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள மதுபானக்கடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி மாவட்ட அதிகாரியிடம் தகவல் கொடுக்க தொடர்பு கொண்டால் அவர் அழைப்பையே ஏற்கவில்லை. அது போக செய்தியாளர்கள் செய்தி எடுத்தால் அவர் மீது சாதி ரீதியான உறவில் பேசி மிரட்டி வருகின்றனர். இது காவல் துறைக்கும் தெரிந்தே நடக்கிறதாம் காரணம் கள்ளதனத்தில் மதுபானங்களை எடுத்துச்செல்லும் மக்களை பிடித்தால் நல்ல வருமானம் என்று காவல் நிலையத்தில் உள்ள ஒரு சில அதிகார்கள் உடந்தையாக செயல்படுகிறார்கள் என காவல் நிலையங்களில் அதிகாரிகள் புலம்புகிறார்களாம் ! மற்றும் காவல்துறையிடம் நிருபர்கள் மீது பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனால் காவல் துறையினர் நிருபர் மீது பொய்யான வழக்கு பதிவு செய்ய முயற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடக்கும் குற்றங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர நிருபர்கள் முயற்சித்தால் தவறுகள் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் உடந்தையாக செயல்படுவது நிருபர்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளத்தனத்தில் மதுபானங்கள் விற்கும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் இது போன்று தவறான செயலுக்கு உதவும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்
Comments
Post a Comment