கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து தவெகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து தவெகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
கும்பகோணம்:நவ 22 -
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டுகளை கண்டித்தும், தொடர்ச்சியாக குழந்தைகள் உயிரிழப்பதை கண்டித்தும், போதுமான மருத்துவர்கள் நியமிக்க வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வெற்றிக்கழக தஞ்சை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் (சனிக்கிழமை) அன்று கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வினோத் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஏ. பாண்டியராஜன் உரை வீச்சு ஆற்றினார். தஞ்சை கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம். செந்தில் ஏற்பாடினை செய்திருந்தார். முக்கிய நிர்வாகிகள் மாநகரச் செயலாளர் வீரா விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அஞ்சனா பாலாஜி, மாவட்ட இணை செயலாளர் பிரபாகரன், தினேஷ், சுதாகர், உட்பட மாணவரணி, இளைஞர் அணி, மகளிர் அணி என அனைத்து பிரிவுகளில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட கழகத்தினர் பங்கேற்றனர்.
நிருபர் அ, மகேஷ்
Comments
Post a Comment