தவெக கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய பாப்பிரெட்டிப்பட்டி மாணவர்கள் புகார்
ஆதவ் அர்ஜுனாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் மாணவர்கள் மற்றும் மாணவர் அமைப்பு சார்பில்
புகார் மனு வழங்கப்பட்டது...
கடந்த 6 - 11- 2025 அன்று ஆதவ் அர்ஜுனா படைப்பாளர் நக்கீரன் கோபால் அவர்களை அவதூறாக பேசி
எங்கள் தலைவன் விஜய் மீது கை வைத்து பாருங்கடா தில் இருந்தா
இப்படியே பண்ணீங்க ஓட்டு மொத்த கல்லூரி இளைஞர்களும் உங்க வீட்டு வாசலில் நிற்பார்கள் என்று பேசியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி கல்லூரி மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் படிக்கின்ற கல்லூரி மாணவர்களை அடுத்த வீட்டு வாசலில் ஏறி அடிடா என்ற உத்தரவிற்கு காத்திருக்கும் அடியாட்களை போன்று மாணவர்களை சித்தரித்துள்ளதாகவும், மாணவர்களை ரவுடிகளாக உருவாக்க நினைப்பதாகவும், ஆதவ் அர்ஜுனா மீது குற்றச்சாட்டு வைத்து தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் சார்பிலும் மாணவரணி அமைப்பு சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment