அங்காளம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு காய்கறி அலங்காரம் #மக்களின் நம்பிக்கைப்பெற்ற இணையதள செய்தி_evidenceparvai

அங்காளம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு காய்கறி அலங்காரம் 


சுவாமிமலை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் ஆடி மாத நிகழ்ச்சி 17ஆம் தேதி முகூர்த்த நாள் நடுதலுடன் தொடங்கியது. முதல் வெள்ளியன்று காலை சிறப்பு அபிஷேகமும், மாலை இலை அலங்காரமும் நடைபெற்றது. இரண்டாவது வெள்ளி காலை சிறப்பு அபிஷேகமும், மாலை பூ அலங்காரமும் நடைபெற்றது. ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு நேற்று காலை அபிஷேகமும், மாலை காய்கறி அலங்காரமும் நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான காய்களை கொண்டு அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Comments