கும்பகோணத்தில் ஆட்டோவை திருடிய கூட்டு களவானிகள் ஆட்டோவுடன் தூக்கிய போலீஸ் #evidenceparvai_police_news
கும்பகோணத்தில் ஆட்டோவை திருடிய கூட்டு களவானிகள் ஆட்டோவுடன் தூக்கிய போலீஸ்
*கும்பகோணத்தில் ஆட்டோவை ஆட்டையை போட்ட இரண்டு திருடர்களை கொத்தாக தூக்கிய கும்பகோணம் போலீசார்,*
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஜூலை 28,ஆம் தேதி இரவு 3 சக்கர ஆட்டோ வாகனம் காணவில்லை என கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது, புகாரை விசாரணை செய்த மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு ரமேஷ் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்,
இந்த நிலையில் மேற்கு காவல் நிலைய போலீசார் கடந்த ஐந்து நாட்களாக குற்றவாளியை தேடி வந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு, ராஜாராம் TPS, உத்ராவின் படி கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு அங்கீத் சிங்,IPS அவர்களின் மேற்பார்வையில் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு, ரமேஷ் அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு, முகில் ராஜ், மற்றும் காவலர் சரவணன், வேளாங்கண்ணி, மனோஜ், ஜனார்த்தனன், ஆகிய போலீசார் தொடர்ந்து கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இரண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்,
அதன் அடிப்படையில் ஆகஸ்ட் 3,ஆம் தேதி அதிகாலை துரிதமாக அந்த இரண்டு எதிரிகளை மடக்கி பிடித்து கும்பகோணம் போலீசார் கைது செய்துள்ளனர்,
மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பிரகாஷ் 21 அம்மன் கோவில் தெரு, தினேஷ் 22 பிரம்மன் கோவில் ரங்கர் தெரு, என தெரியவந்துள்ளது,
அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் இருந்த ஆட்டோவை பறிமுதல் செய்து கும்பகோணம் கிளை சிறையில் அடைத்தனர்,
செய்தியாளர் அ, மகேஷ்
தஞ்சாவூர் மாவட்ட நிருபர்.✒️
Comments
Post a Comment