கும்பகோணத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்,
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக நேற்று 06-08-2025 மாலை 530, மணி முதல் 6.20 மணி வரை கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி நியமன கல்வி தகுதி பட்டப் படிப்புக்காக உயர்த்த கோருதல், 10 ஆண்டுகள் பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர்கள் என்றும், 20 ஆண்டுகள் பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்கள் என்றும் அரசாணை வெளியிடக் கோரியும் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தலைமை செயலாளர் அவர்கள் TSLR பதிவேடுகளை அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டும் என அரசாணை வெளியிட்டதை இதுவரை அமல்படுத்தாமல் இருப்பதை கண்டித்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் கும்பகோணம் வட்ட தலைவர் திரு. உ.சுரேந்திரகுமார் தலைமை வகித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் திரு,க.சுரேஷ் மற்றும் மாவட்ட பொருளாளர் திரு.V.தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கும்பகோணம் வட்டத்தின் வட்ட செயலாளர் திரு.ஆர்.தியாகராஜன் வட்ட பொருளாளர் திரு.ஆ.கார்த்திக்குமார் மற்றும் இருப்பாள் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அ, மகேஷ்
Comments
Post a Comment