கும்பகோணம் அருகே தீ விபத்தில் பாதிப்பு ஏற்பட்ட குடும்பங்களுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜயின் ஆணைக்கிணங்க நிவாரண நிதி வழங்கப்பட்டது #tvk_kumbakonam

கும்பகோணம் அருகே தீ விபத்தில் பாதிப்பு ஏற்பட்ட குடும்பங்களுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜயின் ஆணைக்கிணங்க நிவாரண நிதி வழங்கப்பட்டது
கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் ஊராட்சி நத்தம் கிராமத்தில் 3- 8-2025 அன்று இரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக த,வெ,க, தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் ரவி தகவல் அறிந்து அப்பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டு பாதிப்படைந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார், மேலும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் ஆணைக்கிணங்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுரையின்படி குடந்தை கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆர், ஜி, மணிகண்டன், எம்,மணிகண்டன், ஆர், வினோத், ஏ,முத்துக்குமார், இவர்கள் ஏற்பாட்டில் சுமார் 50,000 மதிப்புள்ள நிவாரணத் தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது, 
இந்நிகழ்வில்
 மாவட்ட கழக பொருளாளர் விஜய்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர், ஏ, பாண்டியன், தினேஷ் பாபு, பாண்டியராஜன்,மாநகர செயலாளர் வீராவிஜயகுமார், மாநகர து.செயலாளர் முருகானந்தம், மாநகர செயற்குழு உறுப்பினர் மகேஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினித், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளர் சித்தார்த், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளர் சுதர்சன், ஒன்றிய இளைஞரணி பிரதிநிதி செருகுடி மகேஷ், ஒன்றிய நிர்வாகி கருப்பூர் ராஜு மற்றும் கழக தோழர்கள் இருந்தனர், 

செய்தியாளர் அ, மகேஷ்

Comments