தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மேல கொட்டையூர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை,! #கும்பகோணம் #தஞ்சாவூர்செய்தி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மேல கொட்டையூர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை,!
கும்பகோணம் அருகே மேல கொட்டையூர் பகுதியைச் சேர்ந்த 9 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது, பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது, தொடர்ந்து சிறுமியின் உடல் நிலையில் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரிக்கும் பொழுது மூன்று நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக முதற்கட்ட அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது, உடனடியாக இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பாபுராஜபுரம் லயங்கரைப்பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் மகன் சுரேஷ்,45, சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுனர் புளியஞ்சேரி பிள்ளையார் கோவில் தெரு செல்வராஜ் மகன் மாதேஷ்,37 மேலக்காவேரி பகுதியை சேர்ந்த முகமது சுல்தான் மகன் நஜிமுதீன் 37 பல சரக்கு கடை வைத்துள்ளார் என தெரிய வந்துள்ளது, இந்தக் கொடூர அரக்கர்கள் மூவரையும் கைது செய்த மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
செய்தியாளர் அ, மகேஷ்
Comments
Post a Comment