கும்பகோணம் சமையல் கலைஞர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பால்குட திருவிழா #evidenceparvai_Reporter_A.Ashok

கும்பகோணம் சமையல் கலைஞர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பால்குட திருவிழா 

கும்பகோணம் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஆழ்வார் கோவில் தெருவில் உள்ள ஜோதி மாரியம்மனுக்கு ஐந்தாம் ஆண்டாக பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கஞ்சிவார்த்தலும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை வாசவி மஹாலில் கலை மாமணி டாக்டர் கல்யாணராமன் பாகவதர் குழுவினரின் நாம சங்கீர்த்தனமும் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்எல்ஏ ராமநாதன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் மூத்த கலைஞர்கள் எஸ்.கோபாலகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், கொட்டையூர் சீனிவாசன், சேதுராமன், சங்கத் தலைவர் ரவி, துணைத்தலைவர் சுரேஷ், செயலாளர் சுரேஷ், பொருளாளர் அபிஷேக் முரளி, துணைப் பொருளாளர் சங்கர், நிர்வாக கமிட்டி தலைவர் சௌந்தரராஜன், கமிட்டி உறுப்பினர்கள் ராஜு, திவாகர், குணசேகரன், கிருபாகரன், ரமேஷ்குமார், ரஞ்சித், ரமேஷ், ராஜகோபாலன் மற்றும் சங்க உறுப்பினர்கள் மகளிர் அணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments