தஞ்சை மாவட்டம் நன்னிலம் தாலுகா ஸ்ரீவாஞ்சியம் கீழவீதியை சேர்ந்த குணசேகரன் 65 என்பவர் கும்பகோணத்தில் கம்பட்ட விஸ்வநாதர் மேல வீதியில் உள்ள தன்னுடைய மகள் ஜெயப்பிரியா 30, மற்றும் பேரக்குழந்தையை பார்க்க நேற்று வியாழக்கிழமை
24,7, 2025 அன்று வந்துள்ளார்,
இந்த நிலையில் அவர் மகளை நலம் விசாரித்து விட்டு பேரக்குழந்தையை கடைக்கு அழைத்துச் சென்று திரும்பும் வழியில் கும்பகோணம் பகுதி தஞ்சாவூர் மெயின் சாலை பழைய அரண்மனை தெரு அருகே குணசேகரன் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மினி பஸ் மோதி பின்புற சக்கரம் தலையில் ஏறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
செய்தியாளர் அ மகேஷ்
Comments
Post a Comment