தஞ்சையில் அறப்போர் இயக்கம் சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்ட சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது, #evidenceparvai _tanjai #breaking_news #Reporter_செய்தியாளர் அ, மகேஷ்

தஞ்சையில் அறப்போர் இயக்கம் சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்ட சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது,



தஞ்சையில் அறப்போர் இயக்கம் சார்பில் மாபெரும் தகவல் பெறும் உரிமைச் சட்ட இலவச பயிற்சி முகாம்  ஜூலை 27, ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி அளவில் தஞ்சாவூர் பகுதியில் அமைந்துள்ள கவிதா மினி அரங்கில் சிறப்பாக  நடைபெற்றது, இந்நிகழ்ச்சியானது காலை 10:30 மணியளவில் தொடங்கப்பட்டு மாலை 5 மணி வரை நடைபெற்றது, 

நிகழ்ச்சிக்கு அறப்போர் இயக்கத்தின் மாநில தலைவர் மற்றும் சிறந்த பேச்சாளர் திரு, ஜெயராமன் தலைமை வகித்தார், இதில் முன்பதிவு செய்து கொண்ட 70-க்கும் மேற்பட்ட சட்ட பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு இலவச தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சி மற்றும் ஆலோசனைகளை கேட்டு அறிந்தனர், 

மேலும் இந்த பயிற்சி வகுப்பில் கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவிடைமருதூர், திருவையாறு, போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான சமூக ஆர்வலர்கள் இந்த முகாமில் பங்கேற்றனர், அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் கும்பகோணத்தில் ஆர்,டி,ஐ, சட்ட பயிற்சி நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்,


செய்தியாளர் அ, மகேஷ்

Comments