தமிழகத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். இந்நிலையில் தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்காததை கண்டித்தும், ஹிந்தி சமஸ்கிருதம் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், தமிழகத்தை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் ஒரு தலை பட்சமாக மோடி செயல்படுவதாகவும், விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் 'கோ பேக் மோடி' என்ற கோஷத்தை எழுப்பியபடி இன்று காலை 11 மணியளவில் கும்பகோணம் காந்தி பூங்கா, சோழபுரம், கடைவீதி வலங்கைமான், தேனி, பெரியகுளம், குடவாசல், ஆகிய ஊர்களில் சாலை மறியல் போராட்டத்தில் அக்கட்சியினர் ஈடுபட்டனர், இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது,
செய்தியாளர் அ, மகேஷ்
Comments
Post a Comment