தமிழகத்தில் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும், பிரதமர் மோடி உறுதியளித்த நிலையில் இந்து முன்னணியினர் வரவேற்பு,
தமிழகத்தில் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும், பிரதமர் மோடி உறுதியளித்த நிலையில் இந்து முன்னணியினர் வரவேற்பு,
தஞ்சை: ஜூலை,29- தமிழகத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த 27 ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன் தெற்கு ஆசியாவை கட்டி ஆண்ட மாமனர்கள் அமைத்த கங்கைகொண்ட சோழபுரம் சிவன் கோவிலை பிரதமர் மோடி பார்வையிட்டார்,
அதனை தொடர்ந்து சோழர்களின் ஆதிக்கத்தையும் ஆட்சி திறனையும் கம்பீர வலிமையையும் வியப்புடன் கேட்டறிந்தார் மோடி,
அதன் பிறகு செந்தமிழ் வரலாறுகளையும் பெருமைகளையும் தமிழ் பக்தி இளையராஜா பாடல்களையும் தமிழின் பெருமைகளையும் அறிந்தார் பிரதமர், அதனைத் தொடர்ந்து முன்னதாக சோழ தேசம் வந்த பிரதமருக்கு தமிழக மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் மேலும் முக்கிய அரசியல் தலைவர்கள் தொல் திருமாவளவன் உட்பட பல தலைவர்கள் பாரத பிரதமரை சந்தித்தனர்,
அதன் பிறகு சோழ தேசத்தில் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனுக்கு மிக பிரம்மாண்டமாக திருவுருவ சிலை அமைக்கப்படும் என பொது நிகழ்ச்சியில் பிரதமர் உறுதி அளித்திருந்தார், அதனை வரவேற்கும் விதமாக
*இந்து முன்னணியினர் உற்சாக வரவேற்பு,*
நேற்று கும்பகோணம் அருகே உடையாளூர் கடைவீதியில் செவ்வாய்க்கிழமை மாலை 6, மணி அளவில் தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் ஒன்றிய செயலாளர் சாரல் சதீஷ்குமார் தலைமையில் கமிட்டி நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ராஜராஜ சோழன் புகழ் வாழ்க..! வாழ்க..!! எனவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புகழ் வாழ்க எனவும், கோஷம் எழுப்பியவாறு சுமார் 30 நிமிடம் புகழஞ்சலி செலுத்தினர், அதன் பிறகு பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்தும் மகிழ்ச்சி தெரிவித்து பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்றிய செயலாளர் சாரல் சதீஷ்குமார் பேசுவையில்
தெற்கு ஆசியாவை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனுக்கு மிக பிரம்மாண்டமாக தமிழகத்தில் சிலை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்ததை தொடர்ந்து இந்து முன்னணியினர் மகிழ்ச்சியோடு அதனை வரவேற்கிறோம் என தெரிவித்தார், மேலும்
ராஜராஜ சோழன் மறைந்த உடையாளூர் கிராமத்தில் சோழர்களின் நினைவாக பிரம்மாண்ட சிலை அமைத்து உடையாளூர் பகுதியை சுற்றுலா ஸ்தலமாக மாற்றி உடையாளூர் பகுதியை மேம்படுத்தினால் உள்ளூர் மக்களுக்கு அது வாழ்வாதாரமாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்,
இந்நிகழ்வில் கமிட்டி பொறுப்பாளர் நேத்ரமணி, சென்னிமங்கலம் ரவி, திருவலஞ்சுழி உமா மகேஸ்வரன், ரவிச்சந்திரன், கொற்கை முருகன், உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்,
செய்தியாளர் அ, மகேஷ்
தஞ்சாவூர் மாவட்ட நிருபர்,
Comments
Post a Comment