நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு போக்குவரத்து பாதிப்பு..

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாததால் பல நாட்களாக நெல்லை கொட்டி வைத்துள்ள விவசாயிகள் இன்று நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு போக்குவரத்து பாதிப்பு..

தஞ்சை மாவட்டம் டெல்டா பகுதிகளில் முன் பட்ட குருவை சாகுபடி பணிகள் நிறைவடைந்து தற்போது தமிழக அரசின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது குறிப்பாக தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது இந்நிலையில் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான நெல்முட்டைகள் தேக்கமடைந்துள்ளது இதனால் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பாக இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் மலை போல் விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்துள்ளதால் அவர்களிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய அலுவலர்கள் காலம் தாழ்த்துவதாலும் உடனடியாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை கிடங்கிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பனந்தாள் ஆடுதுறை சாலையை முற்றுகையிட்டு விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து திருப்பனந்தாள் காவல்துறையினர் போராட்டத்தை ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்..

Comments