கழிவு நீர், மதுபாட்டில்கள், சுகாதாரமற்ற செடி கொடிகள் சுற்றி வளைத்த தஞ்சாவூர் அரசு இராசமிராசுதார் மருத்துவமனை...? ஒரு மாநகராட்சி மருத்துவமனை இவ்வளவு கேவலமா... கலங்கி நிற்கும் மருத்துவர்கள்..?
கழிவு நீர், மதுபாட்டில்கள், சுகாதாரமற்ற செடி கொடிகள் சுற்றி வளைத்த தஞ்சாவூர் அரசு இராசமிராசுதார் மருத்துவமனை...? ஒரு மாநகராட்சி மருத்துவமனை இவ்வளவு கேவலமா... கலங்கி நிற்கும் மருத்துவர்கள்..?
தமிழகத்தில் மிக முக்கியமான கோவில் நகரமாக பேசப்படும் தஞ்சை பெரிய கோவில், அப்படி ஒரு மண்ணை 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழக அரசு மாநகராட்சியாக அறிவித்து. அதற்கான காரணம் ஓங்கி உயர்ந்து நிலை கொண்ட ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில்தான். இப்படிபட்ட இடத்தில் அமைந்துள்ள அரசு இராச மிராசுதார் மருத்துவமனையில் ஆங்காங்கே குப்பைகளும், மதுபாட்டில்களும், கெட்டுப்போன உணவுப் பொருட்களும், மருத்துவமனையை சுற்றி செடி கொடிகள், தேவையற்ற கொடி மரங்கள் அடர்ந்து விஷ பூச்சிகள் வாழும் ஒரு காடாக இருக்கின்றது இந்த மருத்துவமனை, இதனை பயன்படுத்தி பொதுமக்கள் வெளியில் சிறுநீர், மலம், கழிக்கும் நிலை உருவாகியுள்ளது. மருத்துவமனையில் இருந்து கழிவு நீர் வெளியே போக முடியாத நிலையால் ஒரு சில மருத்துவர்களுக்கும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும் நோய் தொற்று ஏற்பட்டு உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நன்றாக பணிகள் செய்யக்கூடிய அனைத்து மருத்துவ அதிகாரிகளுக்கு மக்களிடையே பெரும் அவமதிப்பு பெயர்தான் மிஞ்சும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.??
மேலும் மருத்துவர்களின் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் பணிக்கும் வரும் மருத்துவர்களும், நோயாளிகளை அழைத்து வரும் வாகன ஓட்டுநர்களும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்கள். ஒரு சில இரு சக்கர வாகனங்கள் திருடு போனது என்று மருத்துவ நிர்வாகம் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து ஆர் எம் ஓ அமுத வடிவு அவர்களிடம் கேட்ட போது அப்படி ஒன்று மருத்துவமனையில் இல்லை நாங்கள் தினமும் சுத்தமாக வைத்துள்ளோம் என்றார், மேலும் வெளியில் இருக்கும் சூழலில் அரசு மற்றும் மாநகராட்சி கவனம் செலுத்தி வரவேண்டும் என்று பலமுறை கூறியுள்ளேன். என்றார். யார் செய்யும் தவறாக இருக்கும் இது??? வெளியில் சுத்தமாக வைத்துக் கொண்ட இடத்தை பாருங்கள்..இப்படி ஒரு மாநகராட்சி மருத்துவமனை இப்படி இருந்தால் யாரை ஏமாற்று வேலை, தஞ்சை மக்கள் கோவை மாநகராட்சி, சேலம், மாநகராட்சி மருத்துவமனைக்கு சென்று வாருங்கள் எப்படி ஒரு மாநகராட்சி இருக்கும் என தெரியும் என்கின்றனர் வெளியூரில் இருந்து சிகிச்சைக்கு வந்த மக்கள்..!
Comments
Post a Comment