அரியலூர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் திருமானூர் காவல்துறையினர் உயிருக்கு ஆபத்து..அஞ்சு நடுங்கும் மக்கள்..? மாவட்ட ஆட்சியர் என்ன செய்கிறார்..?
அரியலூர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளால் திருமானூர் காவல்துறையினர் உயிருக்கு ஆபத்து..அஞ்சு நடுங்கும் மக்கள்..? மாவட்ட ஆட்சியர் என்ன செய்கிறார்..?
அரியலூர் மாவட்டம் என்றாலே சிமென்ட் தொழிர்ச்சாலை குவாரிகள், கொள்ளிடம் ஆறு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இருக்கும் இந்த அரியலூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் பேருந்து வசதி இல்லாமல் மக்களை பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலை இருந்தாலும் மக்களை பாதுகாக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் உயிர் பாதுகாப்பு இல்லை என்பதுதான் வெட்கக்கேடு..!
குறிப்பாக அரியலூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையை இணைக்கும் மண்ணாக திருமானூர் ஒன்றியம் உளளது. இப்பகுதியில் சுமார் 24 மணி நேரமாக அதிக பாரங்களை சுமக்கும் கனரக வாகனங்கள் அதிவேகமாக வந்து செல்கின்றனர், இப்பகுதியில் அதிக நெரிசல் மிகுந்த பகுதியான திருமானூர் காவல் நிலையம் அமைந்திருக்கும் அருகில் வேகத்தடை இல்லாத காரணத்தால் அதிக விபத்துகள் ஏற்படுவதாகவும், இங்கிருக்கும் காவல்துறையினர் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக காவல்துறை அதிகாரிகளும் கவலை தெரிவிக்கின்றனர். இது குறித்து திருமானூர் பொதுமக்கள் தெரிவிக்கையில் காவல் துறை அதிகாரிகளே காவல் நிலையத்தை விட்டு வெளியே வரும்போது அஞ்சு நடுங்கும் போது சாதாரண மக்கள் என்ன செய்வார்கள் என்று ஒரு துளி கூட அரியலூர் மாவட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் எட்டி பார்க்கல இங்கே வேகத்தடை இல்லாத காரணத்தால் அருகில் உள்ள இந்தியன் வங்கிக்கு ஒரு சாலையை விட்டு இன்னொரு சாலையை கடக்கும் போது வேகத்தடை இல்லாத காரணத்தால் அதிவேகமாக வரும் வாகனத்தால் பெரும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனை உடனடியாக மாவட்ட ஆட்சியர் களத்தில் இறங்கி சாலை பாதுகாப்பு தேவைக்காக எங்கெங்கு வேகத்தடை வேண்டும் என மக்களிடத்தில் மனுக்களை பெற்று மக்களின் குறைகளை நிறைவேற்றி தரவேண்டும், மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு இப்பகுதியில் வேகத்தடை அமைத்து பொதுமக்களின் உயிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் உயிருக்கும் உரிய பாதுகாப்பை ஏற்படுத்தி தர திருமானூர் பொதுமக்கள் கோரிக்கை வந்துள்ளனர்.
Comments
Post a Comment