நாமக்கல் மாவட்டம் கலியனூர் கிராமத்தை கண்டமாக்கும் மாவட்டம் நிர்வாகம்..! - எல்லா நியூஸ்லையும் பிரபலமாகும் மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் நாய்கடியால் பரிதவிக்கும் மக்களை சந்திக்களையே 5 மணி நேரமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தனி "ஒருவன் "
நாமக்கல் மாவட்டம் என்றாலே கோழிப்பண்ணைக்கு பிரபலமாகும், வரலாறு போயி நாமக்கல் மாவட்டத்தை கலக்கி வரும் மாவட்ட ஆட்சியர் உமா அவர்களால் செய்தி மூலமாக நாமக்கல் மாவட்டம் விளம்பரமாகி வருகிறது. அந்த வகையில் மக்கள் குடியிருக்கும் இடத்தில் இருந்து மேம்பாலம் ஆய்வில் இருந்து ஹெல்மெட் விழிப்புணர்வு என களத்தில் இறங்கி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது.
ஆனால் அதே மாவட்டத்தில் நாய்கடியால் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு கோழிகளையும், ஆடுகளையும், இழந்து வரும் மக்களுக்காக ரமேஷ் எனும் சமூக ஆர்வலர் 5 மணி நேரமாக கலியனூர் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் சம்பவம்தான் மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் செயலுக்கு தற்போது ஒரு ஆச்சரியத்தையும் கேள்வியையும் எழுப்புகிறது.
நாமக்கல் மாவட்டம் கலியனூர் கிராமத்தில் வசிக்கும் மக்கள் தெரு நாய் தொல்லையால் பெருமளவில் பாதிக்கப்பட்டதாகவும் உடனடியயாக அந்த தெரு நாய்க்களை ஊரை விட்டு தூரமான பகுதியில் விட்டுட்டு வருமாறு அப்பகுதியில் பொதுமக்கள் பல முறை கோரிக்கை வைத்துள்ளனர்,
மாவட்ட ஆட்சியர் சந்திப்பு கூட்டத்திலும் ரமேஷ் அவர்கள் மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.. ஆனால் மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் நாய் கடியால் ஆடு, கோழிகளை இழந்த விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரமேஷ் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்,
மேலும் 4 கிலோமீட்டர் அளவில் இருக்கும் கிராம அலுவலரை நியமிக்காமல் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எடப்பாடி அருகே இருக்கும் கொங்கணாபுரம் கிராமத்தை சேர்ந்த திவ்யா கிராம அலுவலரை நியமித்ததால் அவசர தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும் கிராம அலுவலர் திவ்யா சரியான நேரத்திற்கு வர முடியாமல் இருப்பதால் பாதிக்கப்படுவதோ என்னவோ கலியனூர் மக்கள்தான் என்பதை எப்போது செய்தி சேனலில் பிரபலமாகி வரும் மாவட்ட ஆட்சியர் உமா உணருவார் ..? என்ற கேள்வியை எழுப்புகின்றனர் நாமக்கல் மக்கள்
Comments
Post a Comment