தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்கு Go Back மோடி போயி தமிழ்நாட்டில் உள்ள தருமபுரியில் திமுக தொண்டர்கள் திமுக அமைச்சருக்கு Go Back சொல்லும் நிலை வந்ததால் பரபரப்பு..! 2 லட்சரூபா எம்.பி க்கு பொறுப்பு வழங்கியதில் இருந்து தருமபுரி திமுகவில் விரிசல்...


தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்கு
Go Back மோடி போயி தமிழ்நாட்டில் உள்ள தருமபுரியில் திமுக தொண்டர்கள் திமுக அமைச்சருக்கு Go Back சொல்லும் செய்தியால் பரபரப்பு..!  2 லட்சரூபா எம்.பி க்கு பொறுப்பு வழங்கியதில் இருந்து தருமபுரி திமுகவில் விரிசல்...

தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் அவரது உதவியாளர் தேவ்ஆனந்த் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக செய்தி பதிவிட்டதாக திமுக நிர்வாகிகள் மீது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திமுக நிர்வாகிகள் விவசாரணைக்காக அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு.



   தொடர்ந்து தருமபுரி மாவட்ட திமுக கட்சியினரிடையே மீண்டும் மீண்டும் தலைவிரித்தாடும் உட்கட்சி பூசலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக வேளாளர் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தொடர்ந்து நான்காண்டு காலத்தில் மாவட்டத்திற்கு பொருப்பு அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எந்த ஒரு வளர்ச்சி திட்ட பணிகளும் செய்யவில்லை. திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்கவில்லை. இதனால் மாவட்டத்தில் தொடர்ந்து திமுகவினரிடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதனால் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அமைச்சருக்கு எதிரராக தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 


  இதனால் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக திமுக நிர்வாகிகள் ஊழலுக்கு கடலூர் பன்னீர், கமிஷனுக்கு அமைச்சரின் உதவியாளர் தேவ் ஆனந்த், என பதிவிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

     இந்நிலையில் சமூகவலை தளங்களில் அவதூறு பரப்பி பதிவிட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக சார்பில் புகார் தெரிவித்து இருந்தனர். அதன் அடிப்படையில் கிழக்கு மாவட்ட விவசாய பிரிவு துணை அமைப்பாளர் துரைராஜ், கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பூம்புகார் சின்னசாமி, விவசாய அணி துணை அமைப்பாளர் எவரெஸ்ட் மாதையன் மற்றும் கட்சி நிர்வாகிகளை விசாரணைக்காக காவல் கண்காணிப்பாளர் அழைத்திருந்தார். இதனால் மாவட்டத்தில் திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


   அப்போது தருமபுரி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக பொருப்பேற்றுக்கொண்ட தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மாவட்ட வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக இவர் வந்த பிறகு மாவட்டத்தில் திமுகவினரிடையே கருத்து வேறுபாடு உரவாகி உட்கட்சி பூசலாக மாறி உள்ளது. மேலும் அமைச்சரின் உதவியாளர் தேவ் ஆனந்த் கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை. இவர்களை மாவட்டத்தில் இருந்து அப்புறபடுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து திமுக எம் பி க்கு கூடுதல் பொறுப்பு வழங்கியதும் கூட பெரும் தவறு இதனால்தான் கட்சிக்குள் பெரும்  பிரச்சனை உருவெடுத்து வருகிறது என்கின்றனர்  


பேட்டி : துரைராஜ் - கிழக்கு மாவட்ட விவசாய பிரிவு துணை அமைப்பாளர்.

Comments