திமுக மாவட்ட செயலாளர் பழனியப்பனுக்கு நன்றி தெரிவித்த மாரியம்பட்டி கிராம பெண்கள் - கருப்பு சிவப்பு கொடியை பறக்கவிட்டு மக்களை கவர்ந்த சர்மா


திமுக மாவட்ட செயலாளர் பழனியப்பனுக்கு நன்றி தெரிவித்த மாரியம்பட்டி கிராம  பெண்கள் - கருப்பு சிவப்பு கொடியை பறக்கவிட்டு மக்களை கவர்ந்த சர்மா
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் 72_வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று முதல்வரின் அறிவுருத்தலின் பெயரில் தமிழகம் முழுவதும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை திமுக தொண்டர்கள் அள்ளி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தருமபுரி மாவட்டம் திமுக மேற்கு மாவட்ட சார்பில்  பாப்பிரெட்டிப்பட்டி,  பகுதிக்கு உட்பட்ட மாரியம்பட்டி கிராமத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் 72 _ வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பாப்பிரெட்டிப்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துகுமார் அவர்களின் தலைமையிலும் மற்றும்  ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சர்மா அவர்களின் ஏற்பாட்டிலும்,  600 பெண்களுக்கும் 600 ஆண்களுக்கும் வேட்டி, சேலை, மற்றும் இனிப்புகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாரியம்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஏழை எளிய பெண்களுக்கும் ஆண்களுக்கும் வேட்டி சேலை வழங்கி மிக பிரம்மாண்டமாக இந்நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.  மேலும் அவர் பேசுகையில் விடியல் ஆட்சியில் பேருந்து இல்லாத கிராமம் இருக்க கூடாது என்று தளபதி முக ஸ்டாலின் அவர்களின் நல்லெண்ணத்தில் இந்த மாரியம்பட்டி கிராமத்திற்கு  வேளாண்மை துறை அமைச்சர் அவர்களின் ஆதரவால் மக்களாகிய உங்கள் முயற்சியால் 12_A பேருந்து வரவழைக்கப்பட்டது. இந்த பேருந்து வசதியால் மாரியம்பட்டி கிராம பெண்கள் பெரும் மகிழ்ச்சியால் உருகி நின்றனர் என்பதை நான் வீடியோக்களில் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் அந்த அளவுக்கு நமது தளபதி முதல்வர் முக ஸ்டாலின் மக்களுடன் மக்களாய் வாழ்ந்து வருகிறார் இந்த ஆட்சி மேலும் அடுத்தடுத்து தொடர வேண்டும் என்று உங்கள் ஆசியுடன் தளபதி 100 ஆண்டு வாழ வேண்டும் என கூறினார். இறுதியாக மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் அவர்களை சூழ்ந்து கொண்டு பேருந்து விட்டதற்காக நன்றி தெரிவித்து மேலும் 12 A பேருந்து 4 முறை கிராமத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.  இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மேற்கு மாவட்ட அவை தலைவர் மனோகரன் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் அ. சக்தியமூர்த்தி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அருண் அஸ்லாம், புகழேந்தி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments