தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஜ. ஏ. எஸ்.இடமாற்றம் புதிய மாவட்ட ஆட்சியராக சதீஷ் .ஐ.ஏ.எஸ். நியமனம் காத்திருக்கும் சவால்கள்


தர்மபுரி மாவட்ட ஆட்சியர்  சாந்தி ஜ. ஏ. எஸ்.இடமாற்றம் 
புதிய மாவட்ட ஆட்சியராக சதீஷ் .ஐ.ஏ.எஸ். நியமனம் காத்திருக்கும் சவால்கள்

 தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த சாந்தி ஐ.ஏ.எஸ். இடமாற்றம் செய்யப்பட்டு சேலம் பட்டு வளர்ச்சி துறைக்கு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார், இவருக்கு மாற்றாக தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியராக ஈரோடு மாவட்டம் கூடுதல் ஆட்சியராக இருந்து வந்த சதீஷ் ஐ.ஏ.எஸ்.தற்போது தர்மபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்

 தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய பொருளாதாரத்தில் கீழ் நிலையில் வாழக்கூடிய மக்கள் அதிகம் பேர் இருந்து வருகின்றனர் இந்த மாவட்டத்தில், முக்கிய தொழிலான விவசாயம் குறைந்த நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர் மற்ற பெருங்குடி மக்கள் அண்டை மாவட்டமான சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர் ,சென்னை,கோவை போன்ற நகரப் பகுதிகளுக்கும்    அண்டை மாநிலமான கேரளா, பெங்களூர், (கர்நாடகா)போன்ற பகுதிகளுக்கு பெருமளவு அமைப்புசாரா தொழிலாளர்களாக வேலைக்குச் சென்று வாழ்வை ஒட்டி வருகின்றனர்

 குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகள்தொழில் வளர்ச்சி தருமபுரி மாவட்டத்தில் எதுவும் இல்லை   வறுமைக் கோட்டுக்கு கீழ் பெருமளவு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்    இருந்த போதிலும் சாதி அமைப்பிலான கட்சிகள் பெருமளவு தர்மபுரி மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வளர்ச்சிக்கு சவலாக இருந்து வருகின்றனர்   விளிம்பு நிலை மக்களின் இயலாமையை சாதகமாக்கிக் கொண்டு தர்மபுரி மாவட்டத்தில் பெருமளவு நக்சல்வாரி இயக்கங்கள் ஒரு காலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர் தற்போது அவை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு தற்போது சாதி அமைப்புகள் பிடியில் சிக்கிக் கொண்டு தர்மபுரி மாவட்டம் தவித்து வருகிறது


 மேலும் தர்மபுரி மாவட்டத்தில் வளர்ச்சிக்கான வருவாய் இயற்றக்கூடிய சுற்றுலா தளங்கள் ஒகேனக்கல், வாணியாரு ,பழமையான தென்கரைக்கோட்ட தீர்த்தமலை போன்ற பகுதிகளில் சுற்றுலா தளத்திற்கான தரம் உயர்த்தப்படாததால் வருவாய் பெருக்குவதில் பின்னடைவே இருந்து வருகிறது

 மேலும் தர்மபுரி மாவட்டத்தில் பட்டியல், பழங்குடியினர்,வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் நீண்ட காலமாக வீட்டுமனை பட்டா விற்காக  பல ஆண்டுகளாக காத்திருக்கும் நிலை நீடித்து வருகிறததுஅரூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருந்தாலும் அதில் சுற்றுப்பகுதிகளில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தொழில் வளர்ச்சியில் தொழில் நிறுவனங்கள் எதுவுமில்லாமல் உள்ளது தரிசு நிலங்கள் தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவில் இருந்தாலும் முக்கிய தொழிற்சாலைகள் அரூர் பகுதிக்கு வராமல் இருப்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது



 மேலும் பெண் குழந்தை திருமணங்கள் பெருமளவு  கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் ,சில கிராமப் பகுதிகளில் ,மலை கிராமங்களில் இன்றளவும் குழந்தை திருமணங்கள் பெருமளவு நடந்து வருகிறது, மலை கிராமங்கள், உட்கிராமங்கள் அதிக அளவில் இருந்து வருவதால் மருத்துவ வசதி இல்லாததால் சில மருத்துவ நிறுவனங்கள் இதை சாக்காக பயன்படுத்திக் கொண்டு சோதனைக்காக மருந்துகளை மேற்கண்ட மலை கிராமங்களில்  பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன் வண்ணம் இருக்கிறது



 எனவே புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்கும் சதீஷ் ஐ.ஏ.எஸ்  மேற்கண்ட விஷயங்களில் தீவிர கவனம் செலுத்தி தர்மபுரி மாவட்டத்தை வளர்ச்சி மிக்க மாவட்டமாக மாற்றக்கூடிய சவால்கள் நிறைந்ததாக இருந்து வருகிறது


 சவால்களை சமாளித்து சாதிப்பாரா? புதிய மாவட்ட ஆட்சியர் ?

Comments