விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடைபெற்றது
கசுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1892 ஆம் ஆண்டு பட்டியல் சமூக மக்களுக்கு என விவசாய நிலங்கள் லட்சக்கணக்கான ஏக்கர் தமிழகத்தில் ஒதுக்கப்பட்டது
இந்த நிலங்களை மாற்று சமூக மக்கள் வாங்குவதும், விற்பதும் சட்டப்படி குற்றம் , தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக 2783 ஏக்கர் நிலப்பரப்பு பஞ்சமி நிலங்களாக கண்டறியப்பட்டுள்ளது, இந்த நிலங்களை மாற்று சமூகத்தினரிடமிருந்து எங்களுக்கு மீட்டு தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது
இதற்கான சிலர் நீதிமன்றத்தை அணுகி இடத்தை மீட்பதற்கான முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளனர் ஆனால் அரசு அதிகாரிகள் இந்த நிலங்களை மீட்டு பட்டியல் சமூக மக்களுக்கு ஒப்படைப்பதில் மெத்தனப் போக்கு காட்டுவதாக வும்,சட்ட விரோதமாக பஞ்சமி நிலங்கள் பத்திரப்பதி அலுவலகத்தில் போலியான ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் பஞ்சமி நிலங்களை பட்டியல் சமூக மக்களுக்கு மீட்டு மீண்டும் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாப்பிரெட்டிப்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா தலைமை தாங்கினார், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் பழனி வரவேற்புரை வழங்கினார் ,இந்தக் கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் பாவரசு ,மாநில பொறுப்பாளர் நந்தன், தமிழ் அன்வர், பாவேந்தன்,மின்னல் சக்தி,அதியமான், கோட்டை கலைவாணன்,தலித் சேட்டு, சென்ன கிருஷ்ணன் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜானகி ராமன்மற்றும் மாநில ,மாவட்ட ,ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்
இந்த போராட்டத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் பாவரசு பேசுகையில்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு மாவட்ட நிர்வாகம் பட்டியல் சமூக மக்களுக்கு வழங்க வேண்டும், இந்த விஷயத்தில் சில அரசு அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்தில் பட்டியல் சமூக மக்களுக்கு நிலம் சென்று சேர்வதில் முட்டுக்கட்டையாக இருந்து வருவதாகவும், இவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்
மாநில பொறுப்பாளர் நந்தன் பேசுகையில்
தர்மபுரி மாவட்டத்தில் பட்டியல் சமூக மக்கள் தங்களுக்கு சேர வேண்டிய பஞ்சமி நிலங்களை உரிய ஆவணங்களுடன் அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளிடம் மீட்டுத் தரும்படி கோரிக்கை வைத்தாலும், நீதிமன்றத்தை அணுகி சட்டப் போராட்டத்தின் மூலம் வெற்றி பெற்று நிலத்தை மீட்டு பட்டியல் சமூகத்திற்கு மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் எனஉத்தரவு பிறப்பித்த பிறகும், நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் மதிக்காமல் நடந்து வருகின்றனர்
தொடர்ந்து பட்டியல் சமூக மக்கள் நிலமற்ற ஒடுக்கப்பட்ட மக்களாக இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர், தொடர்ந்து போராட்டங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னெடுத்து நடத்தி வரும், ஆதிக்கசாதியினருக்கு ஆதரவாக அரசு நிர்வாகம் தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது, இந்தப் போராட்டம் இத்துடன் நின்று விடுவதில்லை தொடர்ச்சியாக நிலங்களை பட்டியல் சமூகத்திற்கு ஒப்படைக்கும் வரை போராட்டம் தொடரும்
மேலும் சட்ட விரோதமாக பட்டியல் சமூகத்திற்கு சேர்ந்த நிலங்களை போலியான ஆவணங்கள் மூலமாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர், அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது உரிய சட்ட வழக்குகள் பதிவு செய்வோம் என தெரிவித்தார்.
மற்றும்
மாநில இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை
கி.அதியமான்
பேசுகையில் அரசு ஊழியர்கள் பஞ்சமி நிலங்களை தரிசு நிலங்களாக மாற்றி வருகின்றனர் இது கண்டனத்துக்குறியது என்றார்.
மாவட்ட செயலாளர் சர்மா பேசுகையில்
பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, துரிஞ்சிப்பட்டி, மெனசி, அரூர் போன்ற பகுதிகளில் பட்டியல் சமூகத்திற்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் மீட்கும் வரை எங்களது கட்சியின் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்
இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர் தேர்தலுக்கு சில மாதங்களில் இருக்கும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தை தர்மபுரி மாவட்டத்தில் கையில் எடுத்திருப்பது ஆளுங்கட்சியான திமுகவிற்கு தற்போது தலைவலியை ஏற் படுத்தியுள்ளது
Comments
Post a Comment