சினிமாவில் சமத்துவம் வசனம் பேசி - இப்போ கட்சி ஆரம்பிச்சி சாதி பார்த்து பதவி கொடுக்கிறார் தவெக தலைவர் விஜய்..! -
சினிமாவில் சமத்துவம் வசனம் பேசி - இப்போ கட்சி ஆரம்பிச்சி சாதி பார்த்து பதவி கொடுக்கிறார் தவெக தலைவர் விஜய்..! -
10 வருடங்களாக விஜய் இயக்கத்தில் பயணித்து விஜய் பிறந்தநாள் அன்று 500 க்கு மேற்பட்ட நபர்கள் இரத்ததானம் கொடுத்து சுமார் 15 லட்சத்திற்கு மேல் செலவு செய்து விஜய் இயக்கத்தில் பயணித்து வருகிறோம் தற்போது கட்சி தொடங்கியதில் இருந்தும் நாங்கள் சேவை செய்து வருகிறோம், தற்போது திடீரென்று ஒன்றிய பொறுப்பாளர்களை பனையூர் மண்ணிற்கு அழைத்து மாவட்ட செயலாளர் கதிர் என்பவர் மாற்று சமூகத்திற்கு மாவட்ட அளவில் பொறுப்பு கொடுத்துள்ளனர்.
காரணம் என்னவென்றால் எஸ் சி சமூகம் மேலே உள்ள பொறுப்பில் இருக்க கூடாது என்று திட்டவட்டமாக தவெக கட்சியில் உள்ள மாவட்ட செயலாளர் கதிர் என்பவர் செயல்படுகிறார். மேலும் நாங்கள் தளபதி விஜய் க்காக கடைசி வரை இருப்போம். ஆனா எங்களை உள்ளே கூட விடமாட்றாங்க கண்டிப்பா நாங்க தற்கொலை செய்து கொள்வோம் என தொண்டர் ஒருவர் செய்தியாளரிடம் பேட்டி கொடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி தமிழக வெற்றி கழகம் கட்சி மற்றும் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில் தவெக தலைவர் விஜய் அவர்களின் ஆலோசனை இல்லாமல் பொறுப்பு போட முடியாது.
இந்த செய்தியை பார்க்கும்போது விஜயே சாதி பார்க்க தொடங்கிவிட்டார் என்பது தெரிய வருகிறது இது போன்ற சம்பவங்கள் விஜய் போட்ட முதல் மாநாட்டில் ஒவ்வொரு சமூகத்திற்கு ஒவ்வொரு தலைவர்களை அடையாளப்படுத்தி மாநாட்டை தொடங்கினார் அப்போதே தெரிதவிட்டது விஜயும் சாதி பார்க்க தொடஙிவிட்டார் காரணம் அவரும் தமிழகத்தில் சினிமா நடிகராக இருந்தவர்தானே...! மேலும் ஆவேசமாக பேட்டியளித்தவரை உங்களுக்கு சூடு சொரணை இருந்தால் கட்சியை விட்டு வெளியேறுங்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்
Comments
Post a Comment