திமுக ஒன்றிய செயலாளர் பி. எஸ்.சரவணன் ஏற்பாட்டில் தி.மு.க.சார்பில் பையர் நத்தம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு உதயநிதி பிறந்தநாள் விழா பொது கூட்டத்தில் நல திட்டங்களை அமைச்சர் எம் .ஆர் . கே. பன்னீர்செல்வம் வழங்கினார்
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பையர் நத்தம் பகுதியில்திமுக பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ் .சரவணன் தலைமையில் கலைஞர் நூற்றாண்டு பவள விழா மற்றும் உதய நிதி ஸ்டாலின் 47 வது பிறந்த பிறந்தநாளை முன்னிட்டு ஏழை ,எளிய மக்களுக்கு நல திட்டங்கள் வழங்கியும் பொது கூட்டம் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் கலந்து கொண்டு நல திட்டங்களை வழங்கி பேருரை ஆற்றினார்
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி,தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி பழனியப்பன் முன்னாள் அமைச்சர் , தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணிஆகியோ சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேரூரை ஆற்றினர்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம். ஆர் .கே . பன்னீர்செல்வம் பேசுகையில்
நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தனி நபர்கள் பயன் பெறும் மகளிர் உரிமை திட்டம் கடந்த 17 மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது
இதில் அமர்ந்திருக்கும் பெரும்பாலான பெண்கள் பயனடைந்து வருகின்றீர்கள்
கல்லூரி படிப்பவர்களுக்கும் பணம் வழங்கப்படுகிறது ,அதே போல இந்தப் பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் பையர் நத்தம் பகுதியில் இருந்து ஏற்காடு மலைக்குச் செல்ல பல கோடி ரூபாய் செலவில் பாதை அமைக்கும் பணி இரண்டு மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
மேலும் பெண்கள் பேருந்து கட்டணம் இல்லாமல் இலவச பயணம் செய்யும் திட்டம் நம் மாநிலத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது ,இதில் தினம் தோறும் பல லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர் ,அனைத்து குடும்பங்களும் பல்வேறு நல திட்டங்கள் மூலமாக திமுக ஆட்சியில் பயனடைந்து வருகின்றனர்
எனவே அனைத்து மக்களும் மீண்டும் திமுக ஆட்சி அமைப்பதற்கு வாக்களிக்க வேண்டும் இந்தப் பகுதியில் ஒன்றிய செயலாளர் பி. எஸ். சரவணன் உங்களுக்காக உழைத்து வருகிறார் இந்தப் பகுதியில் திமுகவினர் அதிக அளவில் சேருவதற்கு ஒன்றிய செயலாளர் சரவணனுக்கு எனது பாராட்டுக்கள் என இந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்
தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் பேசுகையில்
இளைய தலைவர் நமது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துடிப்பு மிக்கவராக தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்டு வேகமாக செயல்பட்டு வருகிறார்.
திறமையாகவும் செயல்பட்டு வருகிறார் அவரது முயற்சிக்கு அனைவரும் துணை நிற்போம்
வருகின்ற 2026 ஆம்ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும், ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் முயற்சியால் ஏற்காட்டில் இருந்து பையர் நத்தம் பகுதிக்கு பல கோடி ரூபாய் செலவில் பாதை அமைக்கும் பணி இரண்டு மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது அவருக்கு எனது பாராட்டுக்கள் என தெரிவித்தார்.
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி பேசுகையில்
தொடர்ந்து 2 முறை தர்மபுரி மாவட்டத்தில் திமுக வெற்றி பெற்று வருகிறது, என்னை இந்த முறை தேர்ந்தெடுத்த இப்பகுதி மக்களுக்கும், குறிப்பாக அதிக வாக்குகளைப் பெற்றுத் தந்த சரவணனுக்கும் எனது நன்றிகள்
நமது முதல்வரின் முத்தான திட்டங்கள் மூலமாக அனைத்து குடும்பங்களும் பயன் பெற்று வருகிறது, நமது முதல்வரின் திட்டங்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் பின்பற்றி வருகின்றனர் எனவே வருகின்ற 2026 ஆண்டு தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைவதற்கு அனைவரும் கடுமையாக பாடுபட வேண்டும் என பேசினார்
இந்த நிகழ்ச்சியில் பெண்கள் 176 பேருக்கு புடவையும், ஆண்களுக்கு 70 பேருக்குவேட்டியும்வழங்கப்பட்டது மேலும் கல்வியில் நல திட்டங்கள் வழங்கப்பட்டது
பொதுக்கூட்ட முடிவில் மாதேஷ் நன்றியுரை ஆற்றினார்
Comments
Post a Comment