பொம்மிடி எம். எம்.ஜ கிறுஸ்தவ பள்ளி ஆண்டு விழாசபைத் தலைவர் கலந்து கொண்டார்

பொம்மிடி எம். எம்.ஜ கிறுஸ்தவ பள்ளி ஆண்டு விழா
சபைத் தலைவர் கலந்து கொண்டார்


தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள சுங்கர ஹள்ளியில் எம் .எம் . ஐ கத்தோலிக்க பாதிரியார்கள் நடத்தும் ஆங்கிலப்பள்ளி செயல்பட்டு வருகிறது
 மிகவும் பின் தங்கிய நிலையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு இந்தப் பள்ளி சிறப்பானதொரு கல்விசேவையை இப்பகுதியில்வழங்கி வருகிறது

 இந்தப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது , இந்த விழாவில் சபையின் தலைவர் ஜோசப் வில்லியம் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவியருக்கு சிறப்புரை வழங்கினார்


 நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் ஆங்கிலத் திறன் ,விளையாட்டுத் திறன், தனித்திறன், தமிழ் வளர்ப்பு திறன், போன்றவற்றில் சிறந்து விளங்கிய பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது


 மேலும் கலை நிகழ்ச்சிகள், பொது அறிவுதிறன்,நாட்டுப்புறக் கலைகள், பரதநாட்டியம் இசை நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது


 இதில் அருட்தந்தையர்கள்அருள்ராஜ்,ஆரோக்கிய ஜேம்ஸ், வினோத் லூயிஸ், ராஜா, இயேசு பிரபாகரன், விஜயகுமார், வினோத்குமார், சார்லஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்


 அருட் சகோதரிகள் கன்னியாஸ்திரிகள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தனர் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் மற்றும் பொதுநிலையினர் ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் விழாவை முன்னிட்டு பள்ளி கட்டிடங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர்

Comments