தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலச் செய்தித் தொடர்பாளராக அ.ரகமதுல்லா நியமனம் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் அறிவிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலச் செய்தித் தொடர்பாளராக அ.ரகமதுல்லா நியமனம் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் அறிவிப்பு. 

கந்தர்வகோட்டை 

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர்  கு .தியாகராஜன் அவர்கள் 
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சார்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் பணிபுரிந்து வரும் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் அ.ரகமதுல்லா என்பவரை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளராக நியமித்து அறிவிப்பை வெளியிட்டார். அறிவிப்பை வெளியிட்டு பேசிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு அதிகம் உள்ளது. வரும் புத்தாண்டு 2025இல் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று பேசினார்.
 தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தின் சார்பில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு. தியாகராஜன் அவர்களுக்கும்,மாநில செயலாளர்   அருள் குமார்,மாநில பொருளாளர்  உதயகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர்  மணிகண்டன், மாநில அமைப்புச் செயலாளர் ரமேஷ்
மாநில தலைமை நிலைய செயலாளர் கண்ணதாசன்,  மாதேஸ்வரன் உள்ளிட்ட மாநிலத் துணைத் தலைவர்கள், மாநிலத் துணைச் செயலாளர்கள்  அனைத்து மாநில செய்தித் தொடர்பாளர்கள், மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்கள், மாநில தணிக்கை குழு உறுப்பினர்கள், மாநில சட்ட ஆலோசகர்கள் உள்ளிட்ட அனைத்து மாநில நிர்வாகிகள், புதுக்கோட்டை மாவட்ட தலைவர்   ராஜாங்கம், மாவட்டச் செயலாளர் நாயகம், பொருளாளர்  செந்தில் குமார், மாவட்ட அமைப்புச் செயலாளர்  முத்துக்குமார், தஞ்சை மாவட்ட பொருளாளர் கலைஞர் உள்ளிட்ட அனைத்து மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அனைவருக்கு நெஞ்சார்ந்த  நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments