ஒரே சாதிக்குள் மூழ்கி போன அ. பள்ளிப்பட்டி காவல் நிலையம்...! - தலித் சமூகம், வன்னியர் சமூகம், சாராயம் விற்க தடையில்லையாம்..!! இதுதான் காவல் துறை தர்மமா டிஜிபி யே....முதல்வர் முக ஸ்டாலினும், துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினும் புரிந்து கொள்ளவேண்டும்
ஒரே சாதிக்குள் மூழ்கி போன அ. பள்ளிப்பட்டி காவல் நிலையம்...! - தலித் சமூகம், வன்னியர் சமூகம், சாராயம் விற்க தடையில்லையாம்..!! இதுதான் காவல் துறை தர்மமா டிஜிபி யே....முதல்வர் முக ஸ்டாலினும், துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினும் புரிந்து கொள்ளவேண்டும்
தர்மபுரி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் எந்த சாதிய சார்ந்தவர்கள் ஒரு பகுதிகளில் அதிகமாக இருக்கின்றார்களோ அந்த சாதிய சார்ந்த அரசு துறை அதிகாரிகளையும் , காவல்துறை அதிகாரிகளையும் அமல்படுத்துகிறது தமிழக அரசு..
இப்படி ஒரு புறம் இருக்க தமிழகத்தில் உள்ள ஒரு சில காவல்நிலையத்திற்கு உட்பட்ட எல்லைக்குள் வாழும் மக்கள் சாதியால் உயர்ந்தாவர்களா..? தாழ்ந்தவர்களா..? என்று ஒரு களம் கண்டு யார் யார் சாராயம் விற்க வேண்டும் யார் யார் சந்துக்கடை வைக்கவேண்டும்..! இதில் யார் நாம் பதிவு செய்யும் வழக்கிற்கு சமரசம் செய்வார்கள்..!
கேட்பதற்கு கூட நாதியற்ற மக்கள் யார் அவர்களுக்கு பின்னால் எதாவது அதிகார வர்க்கம் அரசியல் ஆதிக்கம் எதாவது இருக்கின்றதா என்று ஆய்வு செய்து சந்து கடை வைக்க அனுமதி கொடுக்கின்றது சில காவல் நிலையங்கள்.
அப்படி உள்ள ஒரு பகுதிதான் இந்த அ.பள்ளிப்பட்டி காவல் நிலையம் மற்றும் அரூர் காவல் நிலையம், தருமபுரி B1 காவல் நிலையம், தருமபுரி மாவட்ட நகர் புறங்களில் பழைய பேருந்து நிலையம் பின் புறத்தில் உள்ள அரசு மதுபான கடைகள் ஒரு பக்கம் இயங்கினாலும் மறுபக்கம் தனியார் பார்களாக தனியார் காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் உள்ள சில கடைகள் பெட்டி கடை பார்கள் போல இயங்கி வருகின்றன. அதனைத்தொடர்ந்து அ. பள்ளிப்பட்டி காவல்நிலையம் மாதம் மாதம் 20000 ஆயிரத்திற்கும் மேல் சந்துக்கடை வியாபாரிகளிடம் பெற்று அதனை பொது தொகையாக அனைத்து காவல் துறை பணியாளர்களுக்கும் பிரித்து கொடுப்பதாக சக காவலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அ. பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் ஒரே சாதியை சேர்ந்த காவல் துறையினர் இருப்பதால் அந்த சாதியை சேர்ந்தவர்கள் சந்துகடை வைத்தாலும் கண்டுகொள்வதில்லை வழக்கு பதிவு இல்லை, டி எஸ் பி. மற்றும் இன்ஸ்பெக்டர் அழுத்ததால் மட்டுமே இவர்கள் மதுவிலக்கு பிரிவில் வழக்கு பதிவு செய்கின்றனர். மேலும் மதுவிலக்கு பிரிவு இதையெல்லாம் என்னவென்றே கண்டுகொள்வதில்லை. ஒருவேளை அவர்களுக்கு கமிஷன் போகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மதுவிலக்கு பிரிவு சரியாக பணியாற்றினால் இங்கு ஏன் அதிகமான சந்துகடைகள் உருவாகப்போகிறது என்ற கேள்வி எழுகிறது.
அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவலர் தங்கும் விடுதிக்கு அருகிலேயே சந்துகடை வைத்து வியாபாரம் நடைபெற்று வருகிறது ஆனால் அ. பள்ளிப்பட்டி காவல் துறை கண்டு கொள்வதில்லை காரணம் அவுங்க சாதியை சேர்ந்தவர்கள் என்பதால்தான். சாதிக்காக சிந்திக்கும் இந்த காவல்துறை அதிகாரிகள் சொந்த சாதிக்காரன் சந்துகடை வைத்தால் நமது சாதியில் பிறந்த பெண்களின் வாழ்க்கையையும் எதிர்கால குழந்தைகளின் வாழ்க்கை அழிவை நோக்கி போகும் என்பதை அ. பள்ளிப்பட்டி காவல் துறை உணர்ந்தால் சிறப்பு என்கின்றனர் சக காவலர்கள்..
தங்கள் சொந்த சாதி காரர்கள் வந்தால் சி எஸ் ஆர் மட்டும் போட்டுவிட்டு அதன்மீது விசாரணை நடத்தாமல் பைசல் பேசி பணம் வாங்கி, விட்டு-விடுகின்றனர். மற்ற சமூகம் வந்தால் எப் ஐ ஆர் போடுவேன் என மிரட்டி கூடுதலாக பணம் பேரம் பேசுவதாக சக காவலர்கள் கூறுகின்றனர்.
மேலும் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து படிக்கின்ற பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டினாள் கூட கண்டுகொள்வதில்லை காரணம் சாதி எனும் மன நோய்தான் . இங்கு சமூக உணர்வை கடந்து சாதி உணர்வு என்பது கீழே உள்ளவனுக்கு மேலே உள்ளவனுக்கு பெரிய நோயாக உள்ளது.
பல்வேறு இடங்களில் தங்களுடைய வருமானத்திற்காகவும், வழக்குக்காகவும் ஆதிதிராவிடர், வன்னியர், போயர், மலைவாழ் St, போன்ற சமூகத்தில் உள்ள மக்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில காவல்துறை அதிகாரிகள் தங்களுடைய லாப சுயநலத்திற்காக சந்துக்கடை வைக்க மறைமுகமாக ஆதரவு தருகின்றனர். இப்படி இருந்தால் இந்த சமூகத்தில் வளரும் இளைய சமுதாயம் எப்படி சரியான பாதையை நோக்கி செல்வார்கள் என்று சிந்திக்க வேண்டியது டிஜிபி சார்தான், என அரசியல் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சாதிக்காக இந்த பிரச்சினை, அந்த பிரச்சனை, என்று சும்மா கிடக்கும் சம்பவத்தை ஊதி பெரிதாக்கும் சாதி உணர்வுகளே.! நன்றாக புரிந்து கொள்ளுங்கள் உங்கள் பகுதியில் விற்கப்படும் சந்துக்கடை, மறைமுகமாக விற்கப்படும் கஞ்சா வியாபாரமும் இவையெல்லாம் உங்களுடைய சாதியை சேர்ந்தவர்கள் விற்கிறார்கள் அவர்களுக்கு எதிராக போராடி இளைஞர்களின் வாழ்வை சிறப்பாக மாற்றுங்கள்.
போதை பொருட்களை விற்று வழக்கு வாங்கி சிறைக்கு செல்லும் உங்கள் சாதிக்காரனின் குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் போது உங்களுக்கும் சரி அதிகாரத்தில் இருக்கும் அரசு ஊழியருக்கும் சரி சாதி உணர்வு வராதா..?
உங்கள் பகுதியில் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் சந்துக்கடை வியாபாரிகளை கண்டு வேடிக்கை எப்படி பார்க்கிறார்களோ அப்படித்தான் அரசியல் பதவிக்கி லாக்கி இல்லாதவர்கள் நீங்களும் என்றும் உணருங்கள்..!
சமீபத்தில் அ.புதுப்பட்டி, பகுதியை சார்ந்த ஒரு பெண்மணி தென்கரைக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் இரண்டு மூட்டையில் மது பாட்டில்களை வாங்கி செல்கிறார் அந்த மது பாட்டில்கள் மீது பத்து ரூபாய் மதிப்பு கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டி கொடுக்கவில்லை,
ஆனால் பாமர மக்கள் குடிப்பதற்காக வாங்கும் பாட்டில்கள் மீது ஸ்டிக்கர்கள் ஒட்டி அதன் மூலம் வருமானத்தை கொள்ளை அடிக்கிறார்கள் அரசு மதுபான வியாபாரிகள். மேலும் மது பாட்டில்களை முறைகேடாக விற்கப்படும் நபர்களிடம் கேட்கும்பொழுது நாங்கள் மாத மாதம் காவல்துறைக்கு 5000 முதல் 10 ஆயிரம் வரை கொடுக்கப்படுவதாக வெளிப்படையாகவே கூறுகின்றனர்.
மற்றும் அ.பள்ளிப்பட்டி குடியிருக்கும் தலித் சமூக பெண்கள் கூறுகையில் எங்க சொந்தக்காரங்க வித்தாலும் அ. பள்ளிப்பட்டி காவல்துறை கண்டு கொள்வதில்லை காரணம் சந்து கடை வைத்திருக்கும் நபருக்கும் காவல்துறைக்கும் நல்ல உறவுகள் இருக்கிறது என்று வெட்ட வெளிச்சமாகவே கூறுகின்றனர்.
மேலும் பயர்நத்தம் பகுதியில் அரசு மதுபான கடைகளை அகற்ற பலமுறை போராடும் எம் எல் ஏ கோவிந்தசாமி ஒரு தடவை கூட சந்துக்கடை வியாபாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியதில்லை இவர் பயர்நத்தம் பகுதிக்கு எம் எல் ஏ வா..? இல்லை பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு எம் எல் ஏ வா..? ஒருவேளை சந்துக்கடை வியாபாரிகளுக்கும், இவருக்கும் கொடுக்கல் வாங்கல் இருக்குமோ என அரசியல் பிரமுகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர். காரணம் பொம்மிடி அருகே பாமக கட்சியை சேர்ந்தவரும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் திமுகவை சேர்ந்தவர்களும் சந்து கடை வைத்துள்ளனர். இதனை கண்டு மற்ற கட்சியினர் சந்தி சிரிக்கிறது எல்லாம் ஒரு நாடகம் போல..! என்கின்றனர்.
இப்படி இருக்கும் பொழுது பள்ளிக்கூடங்களில் புகை இல்லாத சமூகத்தையும் குடிப்பழக்கம், போதை பழக்கம், இல்லாத சமூகத்தையும், உருவாக்க பயணிப்போம் என்ற விழிப்புணர்வு நடத்துவது பெரும் நாடகம் என்கின்றனர்..! முதலில் அடிப்படையாக மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் விற்கப்படும் மதுவிற்கு எதிராக அரசு எப்போது தீவிரமாகவும் உண்மையாகவும் நடவடிக்கை எடுக்கிறதோ அப்பொழுது ஒவ்வொரு கிராமப் பகுதியில் இருந்தும் வருங்கால இளைய சமுதாயம் வாழ்க்கையை சிறப்பாக செயல்படும் என்பதை தமிழக முதல்வரும் காவல்துறை தலைமையான டிஜிபி சங்கர் ஜிவால் ஐயா அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதனை டி ஜி பி மட்டும் அல்ல, மக்கள் நம்பி வாக்களித்து இன்று முதல்வராகி இருக்கும் முதல்வர் முக ஸ்டாலினும், துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினும் புரிந்து கொள்ளவேண்டும் மக்கள் ஒருபக்கம் தேவை என்றால் அதிகாரம் தேவை என்பது திராவிட கட்சியான விடியல் கட்சிக்கு புரியும் என சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்கின்றனர்
இப்படி சொல்லிவிட்டீர் களா கோபம் உங்களுக்கு வந்தால் தயவு செய்து குற்றம் நடக்கும் இடத்தில் உங்கள் கோபத்தை காட்டுங்கள்...இங்கே அமைதியான சமூகம் முக்கியம்....
Comments
Post a Comment