தர்மபுரி அடுத்த வத்தல்மலை அடிவாரத்தில் காற்றாற்று வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகளை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்

தர்மபுரி அடுத்த வத்தல்மலை அடிவாரத்தில் காற்றாற்று வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகளை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்

தர்மபுரி அருகே உள்ள வத்தல்மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் உருவாகி மலையின் அடிவாரத்தில் இருந்த தரைப்பாளத்தை அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டன . இதனால் சின்னங்காடு, நாயக்கனுர், குழியனூர், பால் சிலம்பு, பெரியூர், கொட்லாங்காடு, மன்னாங்குழி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய மலைவாழ் மக்கள் போக்கு வரத்து துண்டிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 
குறிப்பாக மலை கிராமத்தில் இருந்து மலைவாழ் மக்கள் தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், விவசாய இடு பொருட்களை விநியோகம் செய்வதற்கும் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் மேலும் அதிகளவில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதால் மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் தற்போது மாற்றுப்பாதை அமைப்பதற்கான முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஜேசிபி இயந்திரம் மூலம் பணியை மேற்கொண்டது. 

இத்தகவலை அறிந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வத்தல்மலை அடிவாரப் பகுதியில் சேதம் அடைந்த பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வத்தல் மலைக்கு செல்லும் பாதையில் உள்ள நீர்நிலைகளையும் பார்வையிட்டு பின்பு வெள்ள பெருக்கால் பாதிக்கப்பட்டு சேதங்களான, விவசாய நிலங்கள், சாலையில் ஏற்பட்ட சேதங்கள் என பல்வேறு இடங்களில் பார்வையிட்டார். இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திவ்யதர்ஷினி, மாவட்ட ஆட்சியர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகளிடம் மக்களின் குறைகளை கேட்டறிந்து அவைகளுக்கு தீர்வு காண உடனடியாக அரசு நடவடிக்கை மேற்கொள்ள ஆணையிட்டார். இதனைத் தொடர்ந்து அருகே இருந்த மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆத்தோர தெருவில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அருகே உள்ள திருமண மண்டபத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு சென்று மக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டுறிய உள்ளார்.

Comments