தர்மபுரி மாவட்டத்தில் 33 நாட்களில் 2141 மி.மீட்டர் மழைஆறுகளில் வெள்ளப்பெருக்கு,அணைகள் நிரம்பினஏரிகளில் நீர்வரத்து இல்லைஆக்கிரமிப்புகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தர்மபுரி மாவட்டத்தில் 33 நாட்களில் 2141 மி.மீட்டர்  மழை
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு,அணைகள் நிரம்பின
ஏரிகளில் நீர்வரத்து இல்லை
ஆக்கிரமிப்புகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

 பாப்பிரெட்டிப்பட்டி. டிச.4-

 தர்மபுரி மாவட்டத்தில் சில வாரங்களாக தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், அணைகள் நீர் நிரம்பி உள்ள நிலையிலும் 75 %ஏரிகளில் தண்ணீர் இன்றி வறண்டு கிடப்பதால் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 


தர்மபுரி மாவட்டத்தில்  கிழக்குத் தொடர்ச்சி மலை, மேற்குத் தொடர்ச்சி மலை, மலை குன்றுகள், என வனவளங்கள் சுமார் 3,280 சதுர கிலோமீட்டர் வரை காப்புக் காடுகள் உள்ளனர்


 இந்த காப்பு காட்டுகளில் மூலமாக 

கல்ராயன் மலை, சேர்வராயன் மலை, வத்தல் மலை, மேற்குத் தொடர்ச்சி மலை,போன்று மலைத் தொடர்களில் இருந்து காவிரி, தென்பெண்ணை, தொப்பையாறு , வாணியாறு,மார்க்கண்ட நதி, வோப்பாடி ஆறு, சனத்குமாரநதி, கம்பைநல்லூர் ஆறு, மற்றும் பாம்பாறு என அனைத்து ஆறுகளிலும் தற்போது வடகிழக்கு பருவ மழை மூலமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காற்றாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது



 அதேபோல தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுகளான  ஈச்சம்பாடி அணை, கேசரக்குழி பள்ளம் அணை, தும்பலஹள்ளி அணை ,தொப்பையாறு அணை, நாகாவதி  அணை, பஞ்சப்பள்ளி அணை, வாணியாறு அணை, வரட்டாறு அணை,வள்ளி மதுரை அணை என அனைத்து அணைகளிலும் தற்போது நீ நிரம்பி ஆறுகளில் உபரிசென்று கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது


இதனால் விவசாயிகள் ஓரளவு மகிழ்ச்சி மட்டுமேஏற்பட்டுள்ளது


 ஆனால்
தர்மபுரி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்த போதிலும் மாவட்டத்தில் உள்ள 641 ஏரி நீர் நிலைகள் உள்ள நிலையில் 70% ஏரிகள் தற்போது நீர் வரத்து இன்றி வெறும் நிலப்பகுதியாகவே இருந்து வருகிறது


 ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் 546 ஏரிகளும், பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் 14 ஏரிகளும், பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, வடிநிலக்கோட்டம் கட்டுப்பாட்டில் 74 ஏரிகளும் ஆக மொத்தம் 634 ஏரிகள் தர்மபுரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கி வருகின்றனர்


இவைகளில் பெரும்பாலான 70%நீர் நிலைகள் தற்போது தண்ணீர் வரவு இன்று காய்ந்து கிடக்கின்றனர்


 குறிப்பாக அரூர் பகுதியில் போலயம் பள்ளி ஏரி, வெதரம்பட்டி பெரிய ஏரி , தர்மபுரி பகுதியில் அணசாகரம் ஏரி, சோகத்தூர் ஏரி, ராமக்கால் ஏரி, சோகத்தூர் ஏரி பாலக்கோடு பகுதியில் புலிகரை ஏரி, மாதேயமங்கலம் ஏரி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் வாச்சாத்தி ஏரி, ஆலாபுரம் ஏரி, பரையப்பட்டி புதூர் ஏரி, எனவும் பென்னாகரம் பகுதியில் பாப்பாரப்பட்டி பெரிய ஏரி ,புதூர் பெரிய ஏரி என தர்மபுரி மாவட்டத்தில் 546 ஏரி நீர் நிலைகள் இருந்த போதிலும் ஏரிக்கு தண்ணீர் வந்து சேர்வதில் பெரும் பிரச்சனைகள் இருந்து வருகிறது



 இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில் 


தர்மபுரி மாவட்டத்தில்வரலாறு காணாத மழை பொழிந்துள்ளது குறிப்பாக இந்த 33 நாட்களில் 2141மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது அதிலும் டிசம்பர் 1ஆம் தேதிசனிக்கிழமை 318 மில்லி மீட்டர் மழையும்,ஞாயிற்றுக்கிழமை 981 மில்லி மீட்டர் மழையும்,திங்கட்கிழமை201மில்லி மீட்டர் மழையும் கொட்டி தீர்த்துள்ளது


 பெரும்பாலான நீர் நிலைகள், ஏரிகளுக்கு வனக்காப்பு காட்டு பகுதிகளிலிருந்து தண்ணீர் வரும் நிலை நீடிக்கிறது ,   ஆனால் இப்படி வனப்பகுதியில் இருந்து வரும் தண்ணீரை ஆங்காங்கே நீர்நிலை வழிப்பாதைகளை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வந்து சேர்வதில் பெரும் சிரமம் நீடித்து வருகிறது


 75%சதவீத ஏரிகளுக்கு தண்ணீர் வராமல் ஏரிகள் வறண்டு காணப்படுகிறது எனவே விவசாயிகளின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Comments